தளபதி 69 படத்தின் டைட்டில் என்ன தெரியுமா?
thalapathy 69 movie tittle update
கோட் திரைப்படத்திற்கு பிறகு நடிகர் விஜய் நடிக்கும் படத்திற்கு தற்காலிகமாக 'தளபதி 69' என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்தப் படத்தில் பிரகாஷ் ராஜ், பிரியாமணி, கவுதம் வாசுதேவ் மேனன், பூஜா ஹெக்டே, மமிதா பைஜு, நரேன் ஆகியோர் நடிக்க உள்ளனர்.
எச். வினோத் இயக்கி வரும் இந்தப் படம் விஜய் நடிக்கும் கடைசி படம் என கூறி வருகின்றனர். அனிருத் இசையமைக்கும் இப்படம் அடுத்தாண்டு அக்டோபர் மாதம் வெளியாகவுள்ளது. இந்த படமானது அரசியல் தொடர்பான கிரைம் திரில்லர் கதைக்களத்தில் உருவாகி வருவதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் தற்போது தளபதி 69 படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டில் குறித்த அப்டேட் வெளியாகி உள்ளது. அதாவது, வருகின்ற டிசம்பர் 31-ம் தேதி இரவில் படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டில் குறித்த அறிவிப்புகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விரைவில் இப்படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும்.
English Summary
thalapathy 69 movie tittle update