வந்தாச்சு "தளபதி 69" அப்டேட்! இன்று மாலை 5 மணிக்கு வெளியாகிறது! - Seithipunal
Seithipunal


இன்று மாலை நடிகர் விஜய் நடிக்கவுள்ள தளபதி 69 படத்தின் அப்டேட் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.

கடந்த 5-ம் தேதி நடிகர் விஜய் நடிப்பில் இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளியாகி வெற்றிகரமாக  ஓடிக்கொண்டு இருக்கும் திரைப்படம் "தி கோட்". இப்படம் நடிகர் விஜய்யின் 68-வது திரைப்படமாகும்.

இதனைத்தொடர்ந்து, நடிகர் விஜய் தனது 69-வது திரைப்படத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்திற்கு  தற்காலிகமாக 'தளபதி 69' என பெயர் சூட்டபட்டுள்ளது . நடிகர் விஜய்யின் கடைசி படமாக இருக்கும். இதனை அடுத்து சினிமாவை விட்டு விலகி முழு நேர அரசியலில் கவனம் செலுத்த உள்ளார் என அவரே அறிவித்துள்ளார்.

இந்நிலையில். நடிகர் அஜித் நடித்த நேர்கொண்ட பார்வை, வலிமை, துணிவு ஆகிய படங்களை இயக்கிய எச்.வினோத் நடிகர் விஜயின் "தளபதி 69" படத்தை இயக்க இருக்கிறார். மேலும், இப்படத்திற்கு ராக் ஸ்டார் அனிருத் இசையமைக்க உள்ளார் எனவும், நடிகர் விஜயுடன், நடிகர்கள் மோகன்லால், சமந்தா, சிம்ரன், மமிதா பைஜு ஆகியோர் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க உள்ளதாக  தகவல் வெளியாகி உள்ளது.

தற்போது, "தளபதி 69" இந்த படம்  குறித்து அதிகாரபூர்வமான அறிவிப்பு ஒன்று வெளியானது. அந்த அறிவிப்பில், நடிகர் விஜய் நடிக்கும்  "தளபதி 69"  படத்தின் அப்டேட் இன்று மாலை 5 மணிக்கு வெளியாக உள்ளதாக பிரபல தயாரிப்பு நிறுவனமான கே.வி.என் நிறுவனம் அறிவித்துள்ளது. 

கே.வி.என் நிறுவனம் இது குறித்து வீடியோ ஒன்றையும் பகிர்ந்து, நண்பா, நண்பி இது தங்கள் நிறுவனம் தயாரிக்கும் முதல் தமிழ் படமாகும் என்று அதில் தெரிவித்துள்ளது. இதனையடுத்து நடிகர் விஜய் ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Thalapathy 69 update is here Releases today at 5pm


கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?




Seithipunal
--> -->