விஜய் - லோகேஷ் கனகராஜ் கூட்டணி உறுதி.. படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பு.! - Seithipunal
Seithipunal


சமீபத்தில் விஜய் நடிப்பில் வாரிசு படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த படத்திற்கு பின் விஜய் தன்னுடைய 67ஆவது திரைப்படத்தில் தற்போது நடித்து வருகின்றார். இப்படத்திற்கு அனிருத் இசையமைக்க 7 ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கின்றது. 

லோகேஷ் கனகராஜ் இயக்குகின்ற இந்த திரைப்படத்திற்கு தளபதி 67 என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. இத்திரைப்படத்திற்கான பூஜை ஏற்கனவே நடைபெற்று விட்டது. ஆனால், இதுவரை படவேலைகள் ஆரம்பித்து விட்டதை பட குழு அறிவிக்கவே இல்லை.

இந்த நிலையில் தளபதி 67 படத்தின் அப்டேட் குறித்து படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது.

அதன்படி, படக்குழு வெளியிட்ட அறிக்கையில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்கிறார். படப்பிடிப்பு ஜனவரி 2ம் தேதி தொடங்கியது. கத்தி, மாஸ்டர், பீஸ்ட் படங்களை தொடர்ந்து விஜய்யுடன் இணைந்து 4-வது முறையாகப் அனிருத் இசையமைக்கிறார்.

மேலும், இந்த படத்தில் ஒளிப்பதிவு மனோஜ் பரஹம்சா, சண்டைப் பயிற்சி அன்பறிவ், படத்தொகுப்பு பிலோமின் ராஜ், நடனம் தினேஷ், கலை சதீஷ் குமார், வசனங்களை லோகேஷ் கனகராஜ், ரத்ன குமார், தீரஜ் வைத்தி ஆகியோர் எழுதுகின்றனர்.

மேலும், தளபதி 67 படத்தின் அடுத்தடுத்த அப்டேட்கள் விரைவில் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Thalapathy67 Direct lokesh kanagaraj


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->