2025 பிப்ரவரி: எலக்ட்ரிக் இருசக்கர வாகன சந்தையில் பஜாஜ் முதலிடம் – ஓலாவை ஓரங்கட்டிய பஜாஜ்! விற்பனையில் கெத்து காட்டும் TVS, அத்தேர்!
February 2025 Bajaj tops the electric two wheeler market Bajaj edges out Ola TVS shows strong sales Ather
2025 பிப்ரவரி மாத நிலவரப்படி, எலக்ட்ரிக் இருசக்கர வாகன விற்பனை போட்டியில் பஜாஜ் ஆட்டோ முதலிடத்தை பிடித்து, முன்னணி நிறுவனமாக உருவெடுத்துள்ளது. இதுவரை முதலிடத்தில் இருந்த ஓலா எலக்ட்ரிக், விற்பனை சரிவால் நான்காவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.
2024 டிசம்பரில் முதலிடத்தைப் பிடித்த பஜாஜ் ஆட்டோ, 2025 பிப்ரவரியிலும் தன் ஆதிக்கத்தை நிலைநிறுத்தியது. FADA (Federation of Automobile Dealers Associations) வெளியிட்ட புள்ளிவிவரங்கள் அடிப்படையில், பஜாஜ் ஆட்டோ 21,389 யூனிட்களை விற்று, மொத்த சந்தை பங்கில் 25% வைத்துள்ளது. இது வருடத்துடன் ஒப்பிடும்போது 81.82% வளர்ச்சியைக் காட்டுகிறது.
சேதக் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் பஜாஜ் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருக்கிறது. 2024 பிப்ரவரியில் 11,764 யூனிட்கள் விற்பனை செய்த பஜாஜ், ஒரு ஆண்டிற்குள் அதை இரட்டிப்பாக உயர்த்தியுள்ளது.
டிவிஎஸ் மோட்டார், 2025 பிப்ரவரியில் 18,762 யூனிட்கள் விற்று, இரண்டாவது இடத்தில் உள்ளது. 2025 ஜனவரியில் 23,809 யூனிட்கள் விற்பனை செய்திருந்த நிலையில், பிப்ரவரியில் 21.20% சரிவு காணப்பட்டது. இருந்தாலும், 2024 பிப்ரவரியுடன் ஒப்பிடும்போது 28.16% வளர்ச்சி பெற்றுள்ளது.
ஏத்தர் எனர்ஜி, தனது விற்பனையை மேம்படுத்தி 10,000 யூனிட்கள் விற்று, மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது. 2025 ஜனவரியில் 12,906 யூனிட்கள் விற்ற நிலையில், பிப்ரவரியில் 8.52% சரிவு ஏற்பட்டுள்ளது. ஆனால், கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது 29.80% வளர்ச்சி கண்டுள்ளது.
முந்தைய மாதங்களில் முதலிடத்தில் இருந்த ஓலா எலக்ட்ரிக், 2025 பிப்ரவரியில் 8,647 யூனிட்கள் மட்டுமே விற்றுள்ளது. இது 2025 ஜனவரியில் 24,336 யூனிட்களாக இருந்ததை விட -64.47% வீழ்ச்சியைக் காட்டுகிறது. ஆண்டுதோறும் விற்பனை 74.61% சரிந்துள்ளது. வாகனப் பதிவு முகமைகளுடன் ஒப்பந்தங்கள் மறுபரிசீலனை செய்யப்பட்டதுதான், ஓலா விற்பனை சரிவுக்கான முக்கிய காரணம் என கூறப்படுகிறது.
கிரீவ்ஸ் எலக்ட்ரிக் 3,700 யூனிட்களை விற்று, அதன் வளர்ச்சியை நிலைநிறுத்தியுள்ளது. 2025 ஜனவரியில் 3,611 யூனிட்கள் விற்ற நிலையில், 2.46% வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. 2024 பிப்ரவரியுடன் ஒப்பிடும்போது 48.71% வளர்ச்சி கண்டுள்ளது.
எலக்ட்ரிக் இருசக்கர வாகனங்களின் மொத்த சந்தை பங்கு 2025 ஜனவரியில் 6.4% ஆக இருந்த நிலையில், பிப்ரவரியில் 5.6% ஆகக் குறைந்துள்ளது. விற்பனை வீழ்ச்சியும் போட்டி அதிகரிப்பும் இந்த மாற்றத்திற்கு காரணமாக இருக்கலாம்.
2025 பிப்ரவரியில் பஜாஜ் ஆட்டோ தனது சந்தை தலைமையை உறுதி செய்துள்ள நிலையில், ஓலா எலக்ட்ரிக் பெரும் பின்னடைவை சந்தித்துள்ளது. டிவிஎஸ், ஏத்தர் போன்ற நிறுவனங்கள் தொடர்ச்சியாக வளர்ச்சி பெற்று வருகின்றன. ஓலா எலக்ட்ரிக் மீண்டும் முன்னணி இடத்துக்குத் திரும்புமா என்பதற்கான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
English Summary
February 2025 Bajaj tops the electric two wheeler market Bajaj edges out Ola TVS shows strong sales Ather