கிளாமராக சென்று திடீரென ஆணாக மாறிய தமன்னா.! அதிர்ச்சியில் ரசிகர்கள்..! - Seithipunal
Seithipunal


ரவி கிருஷ்ணாவின் கேடி திரைப்படத்தின் மூலம் பிரபலம் அடைந்தவர் தமன்னா. அதில் தமன்னா வில்லி கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். இந்த படத்திற்கு பின்னர் தமன்னா கல்லூரி படத்தில் கதாநாயகியாக நடித்து இருப்பார். 

கல்லூரி படத்தில் அவரது எதிரியான நடிப்பு அனைவரையும் கவர்ந்து இழுத்தது. ஒரு காலகட்டத்தில் தமன்னாவுக்கு தமிழ் சினிமாவில் அனைத்து நடிகர்களுடனும் நடிக்க வாய்ப்புகள் கிடைத்தது. தல தளபதி மற்றும் சூர்யா ஆகியோருடன் நடித்திருந்தார். பின்னர் ஆக்ஷன் திரைப் படத்தில் விஷாலுடன் சேர்ந்து நடித்து இருந்தார். இதில் அவர் எப்போதும் இல்லாத அளவுக்கு கவர்ச்சி காட்டி நடித்து இருந்தார். தெலுங்கு சினிமாவில் தமன்னா தமிழைப் போலவே மிக முக்கிய நாயகியாக நடித்து வந்தார். அப்படிக் கிடைத்ததுதான் அவருக்கு பாகுபலி பட வாய்ப்பும். தமன்னா ஒரு வித்தியாசமான அனுபவத்தை பாகுபலி திரைப்படத்தில் கொடுத்தார்.

அழகு பதுமையாக மட்டுமே நடிக்க தெரியும் என்று நினைத்திருந்த நமக்கு அவர் ஆக்ஷன் காட்சிகளிலும் நடிப்பார் என்பதை பாகுபலியில் காட்டியிருப்பார். தற்போது மாஸ்டர் செஃப் நிகழ்ச்சியை தெலுங்கில் தமன்னா தொகுத்து வழங்கி வந்தார். ஆனால் திடீரென்று நிகழ்ச்சியிலிருந்து தமன்னா நீக்கப்பட்டு தற்போது வேறு ஒருவர் அந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.

இந்த நிலையில், தற்போது நடிகை தமன்னா தற்போது ரீல்ஸ் எனும் பெயரில் கிளாமராக உடையணிந்து ஒரு பாட்டுக்கு நடனமாடிவிட்டு கதவை திறந்து உள்ளே சென்றவர் வரும்போது ஆணாக மாறி வெளியே வந்துள்ளார். இதனை கண்ட ரசிகர்கள் மிகவும் அதிர்ச்சி அடைந்து பலவிதமான கமெண்ட்களை பதிவுசெய்து வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Thamanna change to boy reel video viral


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->