ட்ரெண்டிங்கில் பாடல்கள்! ஜி.வி.பிரகாஷ் கொடுத்த லேட்டஸ்ட் தங்கலான் அப்டேட்!! - Seithipunal
Seithipunal


ப.ரஞ்சித் இயக்கத்தில் சியான் விக்ரம் நடித்துள்ள தங்கலான் திரைப்படம் சுதந்திர தினமான ஆகஸ்ட் 15  அன்று வெளிவரவுள்ளது. பொன்னியின் செல்வன்’ படத்தைத் தவிர்த்து நடிகர் விக்ரமுக்கு சொல்லிக்கொள்ளும்படியான வெற்றி இன்னும் அமையவில்லை. அதிலும் அவர் கேமியோ ரோலில் தான் நடித்திருந்தார்.

அதே போல்  ரஞ்சித்திக்கும் நட்சத்திரங்கள் நகர்கிறது படம் சரியாக போகவில்லை. இதனால் இருவருக்கும் இந்தப்படம் வெற்றிபெற வேண்டிய கட்டாயம் உள்ளது.  கோலார் தங்க வயல் தொடர்பான பீரியட் படமாக எடுக்கப்பட்டுள்ள இந்த படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துளார்.

ஏற்கனவே வெளியான ட்ரைலர் நல்ல வரவேற்ப்பை பெற்ற நிலையில், தற்போது பாடல்களும் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் தனியார் நிறுவனம் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் ,  அங்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சியில் 50  குழந்தைகளுக்கு ஹியரிங் எயிட்ஸ் உபகரணங்களை வழங்கினார்.

ஆயிரத்தில் ஒருவன் பாடல்கள்  முதலில் விரும்ப படவில்லை, ஆனால் பின்னர் ரசிகர்களால் கொண்டாடப்பட்டது குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு, தங்கலான்  படத்தின் பாடல்கள் கடந்த ஐந்து நாட்களாகவே முதலிடத்தில் ட்ரெண்டிங்கில் உள்ளது மகிழ்ச்சியளிக்கிறது. எல்லோருமே தங்களது பெஸ்ட்டைதான்  கொடுக்கிறோம், சில பாடல்களுக்கு அது தானாகவே அமைந்து விடுகிறது என்றார். சமீபத்தில் மனைவியை பிரிந்த ஜி.வி.பிரகாஷுக்கும் தங்கலான்  பட வெற்றி  உற்சாகத்தை கொடுக்கும். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

thangalaan gvprakash vikram moviupdate


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->