அதுக்குள்ள தங்கலான் 2 படப்பிடிப்பு ஆரம்பமா......நடிகர் விக்ரம் OPEN TALK! - Seithipunal
Seithipunal


இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம், மாளவிகா மோகனன், பார்வதி, பசுபதி உள்ளிட்ட பலர் நடித்துள்ள தங்கலான் திரைப்படம், சுதந்திர தினத்தையொட்டி  திரையரங்குகளில் வெளியானது. வெளியாகியுள்ளது.

இந்தியாவில் சுதந்திரத்திற்கு முன்னதாக கோலார் தங்கச் சுரங்கத்தில் மக்கள் சந்தித்த பிரச்னைகளை மையமாகக் கொண்டு இத்திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. தங்கலான் படத்தின் பாடல்களான மினுக்கி மினுக்கி, தங்கலானே ஆகியவை நல்ல வரவேற்பைப் பெற்றது.

மேலும் திரைப்படம் வெளியாகி மக்களிடம் கலவையான விமர்சனத்தை பெற்று வருகிறது.  வசூல் ரீதியாக மிகப் பெரியளவில் வரவேற்பு கிடைத்துள்ளது. அதன்படி  இப்படம் வெளியான முதல் நாளில் மட்டும் 26.44 கோடி ரூபாய் வசூலித்துள்ளது. தங்கலான் திரைப்படத்திற்கு வரவேற்பு நன்றாக கிடைத்ததால் இதற்கான பாகம் 2  எடுக்க படக்குழு திட்டமிட்டுள்ளனர். 

சமீபத்தில் நடைபெற்ற  நேர்காணல் ஒன்றில் நடிகர் விக்ரம்  கலந்து கொண்டார். அப்போது, தங்கலான் பாகம் 2 -ஐ எடுக்க படக்குழு திட்டமிட்டுள்ளதாக தெரிவித்தார். மேலும் விரைவில் இந்த திரைப்படத்திற்கான பணிகள் தொடங்கப்படும் என்று, எதிர்பார்க்கப்படுகிறது.இதனால் விக்ரமின் ரசிகர்கள் மிகவும் உற்சாகத்தில் உள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Thangalan 2 Has the shooting started Actor Vikram open talk


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->