'அரசுக்கும் முதலமைச்சருக்கும் நெஞ்சம் நிறைந்த நன்றிகள்' - சூர்யா நெகிழ்ச்சி!
thanks to Government and CM Surya post
ஞானவேல் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் கடந்த 2021 ஆம் ஆண்டு நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியான திரைப்படம் 'ஜெய் பீம்'.
இந்த திரைப்படத்தில் லிஜோ மோல் ஜோஸ், மணிகண்டன், ரதிஷா விஜயன் மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.
பழங்குடியின மக்களின் வாழ்க்கையை மயமாக வைத்து எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் ரசிகர்கள் இடையே நல்ல வரவேற்பு பெற்றது.
மேலும் முதலமைச்சர் முதல் பல தலைவர்கள் இந்த திரைப்படத்திற்கு வாழ்த்து தெரிவித்தனர். இந்நிலையில் ஜெய் பீம் திரைப்படம் வெளியாகி 2 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள மகிழ்ச்சியை படக்குழுவினர் சமூக வலைதளத்தில் பகிர்ந்து கொண்டாடி வருகின்றனர்.

அதன்படி நடிகர் சூர்யா, தமிழ் நாடு அரசிற்கும் முதலமைச்சருக்கும் நன்றி தெரிவிக்கும் வகையில் பதிவு ஒன்றே பகிர்ந்துள்ளார்.
அதில் தெரிவித்திருப்பதாவது, ''ஜெய் பீம்' திரைப்படம் வெளியான இரண்டாம் ஆண்டு நிறைவு போட்டி வருகின்ற வாழ்த்தும் வெளிப்படுகின்ற அன்பும் சிலிர்ப்பூட்டுகிறது.
மக்களின் மனதில் நிலைத்திருப்பது ஒரு படைப்பிற்கான சிறந்த அங்கீகாரம் நல்ல முயற்சியை வரவேற்றுக் கொண்டாடி வாழ்த்திய அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள்.
திரைப்படம் வெளியான பிறகு தமிழ்நாட்டில் வசிக்கும் பழங்குடியின மக்களுக்கு கிடைத்திருக்கும் நன்மைகள் எங்கள் படைப்பின் நோக்கத்தை முழுமை அடைய செய்த தமிழ்நாடு அரசுக்கும் முதலமைச்சருக்கும் நெஞ்சம் நிறைந்த நன்றிகள்' என குறிப்பிட்டுள்ளார்.
English Summary
thanks to Government and CM Surya post