நித்யானந்தாவிடம் சிக்கிய பிரபல நடிகை ரஞ்சிதாவின் தற்போதைய நிலைமை என்ன தெரியுமா?
நடிகை ரஞ்சிதாவின் தற்போதைய நிலைமை
நாடோடி தென்றல் படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் நடிகை ரஞ்சிதா அறிமுகம் ஆனார். 1990 ஆம் ஆண்டுகளில் பிரபல நடிகையாக வலம் வந்தார்.
தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து வந்த அவர், 2000ஆம் ஆண்டில் ராணுவ வீரரான ராகேஷ் மேனன் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.
அதன் பிறகு, அவருக்கு பட வாய்ப்புகள் குறைந்ததால், சிறிய கதாபாத்திரங்களில் மட்டும் நடித்து வந்தார்.

திருமணம் ஆகி, மூன்றே வருடத்தில் தனது கணவரிடம் இருந்து விவாகரத்து பெற்று பிரிந்தார்.
சில ஆண்டுகளுக்கு பிறகு, நித்யானந்தாவின் ஆசிரமம் சென்று அவருக்கு சிஷியையாக மாறினார்.
அந்த நேரத்தில், நடிகை ரஞ்சிதாவும், நித்யானந்தாவும் நெருக்கமாக இருக்கும் வீடியோ காட்சி தனியார் தொலைக்காட்சி ஒன்றில் வெளியானது.
இந்த வீடியோ காட்சி, இந்தியா முழுவதும் பரவி பெரும் அதிர்ச்சியை உண்டாக்கியது.
இந்தியாவின் முன்னணி செய்தி ஊடகங்கள் அனைத்தும் இந்த நிகழ்வை திரும்ப திரும்ப ஒளிபரப்பின.

தற்போது, ரஞ்சிதா தனது பெயரை "ஆனந்தமாயி" என்று மாற்றிக்கொண்டு, நித்யானந்தாவின் ஆசிரமத்தில் பெரிய பொறுப்பில் இருக்கிறார்.
அதனோடு, ஆசிரம நிர்வாகத்தையும் அவரே கவனித்து வருகிறாராம்.
ரஞ்சிதா, இயக்குனர் மணிரத்தினம் இயக்கிய ராவணன் திரைப்படத்தில் கடைசியாக நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
English Summary
The current situation of Actress Ranjitha