விஜய் சேதுபதி வசனத்தில்... விமலுடன் இணைந்து நடிக்கும் தமிழக முன்னாள் காவல்துறை அதிகாரி.! - Seithipunal
Seithipunal


தமிழக அரசின் முன்னாள் காவல்துறை டிஜிபி ஆன  ஜாங்கிட் தமிழ் திரைப்படம் ஒன்றில் நடித்திருக்கிறார். இந்தத் திரைப்படம் அடுத்த வாரம் வெளியாகவுள்ள நிலையில் படத்தின் விளம்பரங்களில் நாயகன் விமலின் புகைப்படமும் காவல்துறையின் முன்னால் டிஜிபியின் புகைப்படம் ஆகியவை இடம் பெற்று இருக்கின்றன.

சசிகுமார் நடித்த குட்டிப்புலி திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமாகியவர் சரவண சக்தி. இவரது இயக்கத்தில் தற்போது குலசாமி என்ற திரைப்படம் திரைக்கு வர தயாராக இருக்கிறது. இந்த திரைப்படத்தில் விமல் கதாநாயகனாக நடித்திருக்கிறார். இந்தத் திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக தன்யா ஹோப் என்பவர் நடித்துள்ளார். மேலும் இந்த திரைப்படத்தில் வில்லனாக பிரபல தயாரிப்பாளர் ஜனனி பாலு நடித்திருக்கிறார்.

இந்தத் திரைப்படத்தின் வசனங்களை மக்கள் செல்வன் விஜய் சேதுபதி எழுதி இருக்கிறார் என்பதுதான் இத்திரைப்படத்தின் மிகச்சிறந்த அம்சமாகும். இத்திரைப்படத்தின் மோஷன் பிச்சரும் சில நாட்களுக்கு முன்பு வெளியிடப்பட்டது. இத்தனை படத்தின் படப்பிடிப்புகள் அனைத்தும் முடிவடைந்த நிலையில் படம் வருகின்ற  21 ஆம் தேதி வெளியாக இருக்கிறது.

இத்திரைப்படத்தில் மற்றொரு முக்கிய அம்சமாக தமிழக காவல்துறையின் முன்னாள் டிஜிபி ஜாங்கிட் அவர்கள் காவல்துறை கதாபாத்திரத்தையே ஏற்று நடித்திருக்கிறார். இது பற்றி பத்திரிகையாளர்களிடம் கூறிய அவர் இத்திரைப்படம் சிறுமிகளுக்கு நடக்கும் தொல்லைகள் மற்றும் சிறுமிகளை அவற்றிலிருந்து காவல் துறை எவ்வாறு காப்பாற்றுகிறது என்பதை பற்றிய கதை என குறிப்பிட்டார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

The film will release on April 21 starring a Tamil Nadu ex police officer opposite Vimal


கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?




Seithipunal
--> -->