நடிகர் சசிகுமார் நடித்த 'நந்தன்' படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியானது! - Seithipunal
Seithipunal


இயக்குனராக 'சுப்ரமணியபுரம்' திரைப்படத்தின் மூலம்  அறிமுகமானவர் சசிகுமார். இன்றும் ரசிகர்கள் , ரசிகர்கள் மத்தியில் இத்திரைப்படம் தனி கவனத்தைப் பெற்றுள்ளது. 

சுப்ரமணியபுரம் திரைப்படத்துக்கு பின் 'ஈசன்' என்ற திரைப்படத்தை இயக்கினார். அதன்பின் சசிகுமார் நடிப்பதில் ஆர்வம் காட்டினார். பின்னர் இவர் நடித்து வெளியான 'அயோத்தி' திரைப்படம் வெற்றிப்படமாக அமைந்த நிலையில் நல்ல பெயரையும் பெற்று கொடுத்தது.

இந்நிலையில், நடிகர் சூரி உடன் சேர்ந்து நடித்து 'கருடன்' திரைப்படத்தின் வெற்றிக்கு பிறகு நடிகர் சசிகுமார் நடித்துள்ள 'நந்தன்' திரைப்படம் நீண்ட நாள் இடைவெளிக்கு பிறகு திரைகளில் வெளியாக உள்ளது. இந்த படத்தை  'உடன்பிறப்பே' என்ற படத்தை எடுத்த இயக்கியனர் ரா.சரவணன் இயக்கியுள்ளார். 

நடிகர் சசிகுமார் இதுவரை நாம் பார்த்திராத தோற்றத்தில் இப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். இவருடன் ஸ்ருதி பெரியசாமி மற்றும் பாலாஜி சக்திவேல் இந்த படத்தில் முக்கியமான கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.

இந்நிலையில், நந்தன் திரைப்படத்தின் பர்ஸ்ட் சிங்கிளான 'எக்கி எக்கி பாக்குறான்' என்ற பாடல் தற்போது வெளியாகி உள்ளது.  இந்த பாடல் வெளியாகி சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. இயக்குனர் ரா.சரவணன் இது குறித்து பதிவு ஒன்றை தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

The first single of actor Sasikumar starrer Nandhan was released


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->