''THE GOAT'' திரைப்படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் அப்டேட்.! - Seithipunal
Seithipunal


வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்'. ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த திரைப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். 

இந்த திரைப்படத்தின் படபிடிப்பு கேரளா, திருவனந்தபுரத்தில் நடைபெற்றது. இதனை தொடர்ந்து படத்தின் அடுத்த கட்ட படபிடிப்பு மாஸ்கோவின் நடைபெற்று வருகிறது. 

சமீபத்தில் நடிகர் விஜய் ஸ்கேட்டிங் சைக்கிள் ஓட்டிய வீடியோ, ரசிகர்களிடையே எடுத்துக் கொண்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. 

கோட் திரைப்படம் வருகின்ற செப்டம்பர் 5ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளதாக பட குழு போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பால் ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளனர். 

இந்நிலையில் இந்த திரைப்படத்தின் முதல் பாடல் குறித்து அப்டேட் வெளியாகியுள்ளது. அதாவது, படத்தின் தயாரிப்பாளர் தனது எக்ஸ் வலைதளத்தில், 

''தி கோட்'' திரைப்படத்தின் முதல் பாடலுக்கு நீங்கள் தயாரா? என பதிவிட்டுள்ளார். இதன் மூலம் விரைவில் படத்தின் ஃபர்ஸ்ட் பாடல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.


 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

THE GOAT movie First single update


கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?



Advertisement

கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?




Seithipunal
--> -->