''THE GOAT'' திரைப்படத்தின் முதல் பாடல் குறித்த அப்டேட்: வைரலாகும் போஸ்டர்.!
THE GOAT Movie First Song Update
வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள ''தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்'' திரைப்படத்தில் பிரபுதேவா, பிரசாந்த், லைலா, சினேகா பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.
இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு கேரளாவில் நடைபெற்றதை தொடர்ந்து தற்போது மாஸ்கோவில் அடுத்தகட்ட படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.
இந்த திரைப்படம் வருகின்ற செப்டம்பர் 5ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளதாக படக்குழு போஸ்டர் ஒன்றை வெளியீட்டு அறிவித்தது.
இந்நிலையில் படத்தின் முதல் பாடல் இன்று மாலை 6 மணி அளவில் வெளியாக உள்ளதாக பட குழு போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது.
இதனால் ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்திலும் எதிர்பார்ப்பிலும் உள்ளனர். மேலும் இந்த போஸ்டர் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
English Summary
THE GOAT Movie First Song Update