மூக்குத்தி அம்மன் 2 படப்பிடிப்பில் நடந்த பிரச்னை !சண்டை போட்ட நயன்தாரா? நடந்தது என்ன?
The problem that happened during the shooting of Mookuthi Amman 2 Was it Nayanthara who got into a fight What happened
நயன்தாரா நடிக்கும் மூக்குத்தி அம்மன் 2 படத்திற்கான படப்பிடிப்பில் ஏற்பட்ட சர்ச்சை மற்றும் அதன் சமரசம் பற்றிய தகவல்கள் தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
படப்பிடிப்பில் ஏற்பட்ட விவாதம்
மூக்குத்தி அம்மன் 2 படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வந்தபோது, ஆடை தொடர்பான ஒரு விஷயத்தில் நயன்தாரா மற்றும் உதவி இயக்குநர் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இது படப்பிடிப்பை பாதிக்க, கோபித்துக்கொண்டு நயன்தாரா ஷூட்டிங் ஸ்பாட்டை விட்டு வெளியேறினார் என்ற தகவல் சமூக வலைதளங்களில் பரவியது.
தயாரிப்பாளரின் தலையீடு & புதிய ஷெட்யூல்
இந்நிலையில், தயாரிப்பாளர் ஐசரி கே. கணேஷ் உடனடியாக தலையிட்டு நயன்தாராவுடனான பிரச்சனையை சமரசம் செய்ய பேச்சுவார்த்தை நடத்தியதாக கூறப்படுகிறது. இதன் முடிவாக, பொள்ளாச்சி ஷெட்யூல் ரத்து செய்யப்பட்டு, சென்னையில் உள்ள ஆலப்பாக்கத்தில் இருக்கும் பொன்னியம்மன் கோவிலில் படப்பிடிப்பை மீண்டும் தொடங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாம்.
மூக்குத்தி அம்மன் 2 - பான் இந்தியா பிரம்மாண்டம்!
ஏற்கனவே வெற்றிப் படமான முதல் பாகம்!
மூக்குத்தி அம்மன் படத்தின் முதல் பாகத்தை ஆர்.ஜே. பாலாஜி இயக்கி, ஓடிடியில் வெளியானது. மிகப்பெரிய வெற்றி பெற்ற இப்படத்தின் இரண்டாம் பாகத்தை சுந்தர் சி இயக்க, மிகப்பெரிய அளவில் உருவாக்கி வருகின்றனர்.
சமீபத்தில் சென்னையில் நடைபெற்று வரும் படப்பிடிப்புடன், நசரத்பேட்டையிலும் ஷூட்டிங் தொடரும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
நயன்தாரா சம்பந்தமான இந்த சர்ச்சை படம் வெளியாவதற்குள் மேலும் எந்த அளவுக்கு விவாதங்களை உருவாக்கும் என்பது விரைவில் தெரிய வரும்!
English Summary
The problem that happened during the shooting of Mookuthi Amman 2 Was it Nayanthara who got into a fight What happened