'தி கேரளா ஸ்டோரி' பட தயாரிப்பாளரை நடுரோட்டில் தூக்கிலிட வேண்டும்.. முன்னாள் அமைச்சர் சர்ச்சை பேச்சு.! - Seithipunal
Seithipunal


கேரளாவில் இந்து இளம் பெண்களை மூளை சலவை செய்து மதம் மாற்றி ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத இயக்கத்தில் சேர்த்ததாக எடுக்கப்பட்ட படம் தான் தி கேரளா ஸ்டோரி திரைப்படம். கேரளாவில் கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் வெளியான நிலையில் ரசிகர்களிடையே கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது.

இதனையடுத்து தமிழகத்தில் கடந்த மே 5ம் தேதி பலத்த பாதுகாப்புகளுடன் வெளியாகியது. இந்த படத்திற்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியதால் அசம்பாவிதங்களை தவிர்க்க திரையரங்குகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.

இதனிடையே கேரளா, தமிழகம், மேற்குவங்கம் உள்ளிட்ட மாநிலங்களில் சட்ட ஒழுங்கு காரணமாக கேரளா ஸ்டோரி திரைப்படத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து கேரளா ஸ்டோரி திரைப்பட காட்சிகள் ரத்து செய்யப்பட்ட தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தயாரிப்பாளர் விபுல் ஷா எச்சரித்தார். 

இந்த நிலையில் கேரள ஸ்டோரி பட தயாரிப்பாளரை பொது இடத்தில் தூக்கிலிட வேண்டுமென மகாராஷ்டிரா மாநில முன்னாள் அமைச்சர் சர்ச்சைக்குரிய வகையில் பேசி உள்ளார்.

இதுகுறித்து மகாராஷ்டிரா மாநில தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் அமைச்சருமான ஜிதேந்திர அவ்கத் பேசியதாவது, தி கேரளா ஸ்டோரி திரைப்படக் குழுவினர் கேரளாவின் நன்மதிப்பை அவமதித்தது மட்டுமில்லாமல் கேரள பெண்களையும் அவமதித்துவிட்டனர். 

கேரளாவை சேர்ந்த 32 ஆயிரம் பெண்கள் காணாமல் போனதாகவும் அவர்கள் ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத அமைப்பில் சேர்ந்து விட்டதாகவும் படக்குழுவினர் கூறியுள்ளனர். ஆனால் உண்மையில்  3 பேர் தான் ஐஎஸ்ஐஎஸ் அமைப்பில் சேர்ந்துள்ளனர். இந்தத் திரைப்படம் ஒரு கட்டுக்கதை. இந்த திரைப்படத்தின் தயாரிப்பாளரை பொது இடத்தில் தூக்கிலிட வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

The producer of 'The Kerala Story' should be hanged Ex-minister controversial speech


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->