பட்ஜெட்டில் முக்கிய அறிவிப்பு!!! ரூ.40 கோடி மக்காச்சோளம் உற்பத்தி மேம்பாட்டிற்கா!!!
Important announcement in the budget Rs40 crore to improve maize production
விவசாயிகள் கோரிக்கையாகக் கால்நடைத் தீவன உற்பத்திக்கு உகந்த, புரதம், மாவுச்சத்து நிறைந்த வீரிய ரகங்களை உருவாக்குவதற்கு மக்காசோளத்தில் ஆராய்ச்சி மேற்கொள்ள வேண்டும் எனவும், இதற்காகத் திட்டங்கள் வகுத்து, வேளாண் பட்ஜெட்டில் நிதி ஒதுக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டனர்.

இந்நிலையில், இன்று (மார்ச் 15) மக்காச்சோள உற்பத்தி மேம்படுத்த ரூ.40 கோடியே 27 லட்சம் ஒதுக்கீடு செய்து வேளாண் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.
வேளாண் பட்ஜெட்:
இது குறித்து சட்டசபையில் அமைச்சர் எம்.ஆர்.கே,பன்னீர் செல்வம் கூறியதாவது,"மக்காச்சோள உற்பத்தி மேம்பாட்டுத் திட்டத்தின் படி, மானாவாரியிலும் அதிக மகசூல் தந்து, உழவர்களுக்குப் போதிய வருமானத்தைக் கிடைக்க செய்வதில் மக்காச்சோளப் பயிர் முன்னிலை வகிக்கிறது.
தமிழகத்தில் மக்காச்சோளம் 10 லட்சத்து 13 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் சாகுபடி செய்யப்பட்டு 28 லட்சம் மெட்ரிக் டன் உற்பத்தி செய்யப்படுகிறது.
மேலும் மக்காச்சோளம் சாகுபடி மூலம், உழவர்களுக்கு அதிக வருமானம் கிடைக்கச் செய்யும் வகையில், மக்காச்சோளம் உற்பத்தி மேம்பாட்டுத் திட்டம் 1 ,87,000 ஏக்கர் பரப்பளவில் 79000 உழவர்கள் பயனடையும் வகையில், ரூ.40 கோடியே 27 லட்சத்தில் செயல்படுத்தப்படும்" எனத் தெரிவித்துள்ளார்.
English Summary
Important announcement in the budget Rs40 crore to improve maize production