வேளாண் பட்ஜெட் 2025: கோடை உழவுக்கு ரூ.2,000 மானியம்! தமிழகத்தின் 29 மாவட்டங்களுக்கு சிறப்புத் தொகுப்பு! - Seithipunal
Seithipunal


வேளாண் வளர்ச்சிக்கு புதிய சிறப்புத் திட்டங்கள் – 2025-26 பட்ஜெட் அறிவிப்புகள்

தமிழகத்தில் டெல்டா மாவட்டங்களை தவிர 29 மாவட்டங்களில் நெல் சாகுபடியை அதிகரிக்க சிறப்புத் தொகுப்பு திட்டம் செயல்படுத்தப்படும் என வேளாண் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் சட்டப்பேரவையில் அறிவித்தார்.

பட்ஜெட்டின் முக்கிய அம்சங்கள்:

நெல் சாகுபடி ஊக்குவிப்பு

  • மானாவரி நிலங்களில் 3 லட்சம் ஹெக்டேரில் கோடை உழவு செய்ய ஹெக்டேருக்கு ரூ.2,000 மானியம் வழங்கப்படும்.
  • காவிரி படுகை மாவட்டங்களில் குறுவை சாகுபடியை அதிகரிக்க தனி திட்டம் செயல்படுத்தப்படும்.

விவசாயிகள் நலத்திட்டங்கள்

  • 30 லட்சம் விவசாயிகளுக்கு பயிர்க் காப்பீடு வழங்கப்பட்டுள்ளது.
  • நிலமற்ற வேளாண் தொழிலாளர்களுக்கு விபத்து மரண இழப்பீடு மற்றும் இறுதிச் சடங்கு செலவுத் தொகை அதிகரிப்பு.
  • மலைப்பகுதி விவசாயிகளின் முன்னேற்றத்திற்காக தனி நிதி ஒதுக்கீடு.

பொருளாதார ஆதரவு திட்டங்கள்

  • உழவர் நல மையங்கள் வழியாக ரூ.3 லட்சம் முதல் ரூ.6 லட்சம் வரை மானியம் வழங்கப்படும்.
  • விவசாயிகளுக்கு ரூ.3.58 லட்சம் கோடி விவசாய கடன் வழங்கப்பட்டுள்ளது.

நெல் கொள்முதல் & தோட்டக்கலை பயிர்கள்

  • 2023-24ஆம் ஆண்டில் 147 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.
  • 16.3 லட்சம் ஹெக்டேரில் தோட்டக்கலை பயிர்கள் பயிரிடப்பட்டுள்ளன.

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

TN budget Agriculture Budget


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->