விஜய் இந்த ரோல் செஞ்சா படம் கண்டிப்பா சொதப்பல் தான்.. அடித்து கூறிய பிரபலம்.! - Seithipunal
Seithipunal


தமிழ் சினிமாவில் நிறைய படங்களில் நடித்து தளபதி என்ற பெயருடன் புகழின் உச்சியில் இருப்பவர் நடிகர் விஜய். இவர் கடந்த 1998 பிரியமுடன் திரைப்படத்தில் ஒரு நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். இந்த திரைப்படத்தின் இறுதியில் விஜய் இறந்து விடுவது போன்று காட்டப்பட்டிருக்கும். 

இதை ரசிகர்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இதுபோன்ற காட்சிகளில் அவர் நடிக்க வேண்டாம் என்பதுதான் ரசிகர்களின் கருத்தாக இருக்கும். இந்த நிலையில், தியேட்டர் விநியோகஸ்தர் திருப்பூர் சுப்பிரமணியன், "நடிகர் விஜய்க்கு நெகட்டிவ் கதாபாத்திரங்கள் அவ்வளவாக செட்டாவது இல்லை  

பிரியமுடன் படத்தில் நடிகர் விஜய் இறந்ததுபோல காட்டிய நேரத்தில் அவர் இறப்பு ரசிகர்களுக்கு எவ்வளவு பெரிய வேதனையை கொடுத்தது என்பது தியேட்டரில் இருந்தவர்களுக்குத்தான் தெரியும். அது போல அவர் அழகிய தமிழ் மகன் படத்திலும் இரண்டு கதாபாத்திரங்களில் ஒன்று நெகட்டிவாக இருந்தது.

 அதில் வில்லன் விஜய் இறப்பதுபோல காட்டப்பட்டிருக்கும். அந்த படம் வெற்றி பெறவில்லை என்பது அனைவருக்கும் தெரியும். அவருக்கு வில்லன் கதாபாத்திரங்கள் எப்போதும் செட்டாவது இல்லை." என்று அவர் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Thirupur subramaniyan about Vijay villain Character


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->