துணிவு, வாரிசு படத்தின் டிக்கெட் புக்கிங் தேதி அறிவிப்பு..!!
Thunivu Varisu movie ticket booking date announced
பொங்கலை முன்னிட்டு தமிழ் திரை உலகின் முன்னணி நடிகர்களான விஜயின் வாரிசு திரைப்படமும், அஜித்குமாரின் துணிவு திரைப்படமும் வெளியாக உள்ளது. இந்த இரு படங்களையும் உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயின்ட் மூவிஸ் வெளியிடுகிறது. இரு படங்களுக்கும் திரையரங்குகள் ஒதுக்குவதில் இழுபறி நிலவி வந்த நிலையில் அதற்கான முடிவு எட்டப்பட்டுள்ளது.

இந்த இரு படங்களுக்கும் தலா 550 திரையரங்குகள் என சம அளவில் ஒதுக்க உரிமையாளர்கள் சங்கம் முடிவு செய்துள்ளது. மேலும் 7 நாட்களுக்குப் பிறகு விமர்சனம் மற்றும் வசூல் ரீதியில் முன்னிலை வகிக்கும் படத்திற்கு திரையரங்குகள் கூடுதலாக ஒதுக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக திரையரங்கு உரிமையாளர் சங்க தலைவர் திருப்பூர் சுப்பிரமணியன் தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் வாரிசு மற்றும் துணிவு படத்திற்கான டிக்கெட் முன்பதிவு வரும் திங்கள்கிழமை (ஜன.9) முதல் தொடங்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
Thunivu Varisu movie ticket booking date announced