'துருவ நட்சத்திரம்' படத்தை வெளியிட தடையா? சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி!
Thuruva Nakshatram release ban Chennai High Court order
இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் நாளை காலை 10:30 மணிக்குள் ஆல் இன் பிக்சர்ஸ் நிறுவனத்திடம் வாங்கிய ரூ. 2 கோடியை திரும்ப அளிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் விக்ரம் நடித்துள்ள திரைப்படம் 'துருவ நட்சத்திரம்'. இந்த திரைப்படத்தில் ரிது வர்மா, பார்த்திபன், ராதிகா, விநாயகன் ஆகியோர் நடித்துள்ளனர்.
ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ள இந்த திரைப்படம் நாளை வெளியாகும் என பட குழு அறிவித்திருந்தது. கௌதம் வாசுதேவ் மேனன் சிம்பு நடிப்பில் சூப்பர் ஸ்டார் என்ற திரைப்படத்தை இயக்க ரூ. 2.40 கோடி பெற்று படத்தை முடிக்கவில்லை என ஆல் இன் பிக்சர்ஸ் நிறுவனம் வழக்கு தொடர்ந்தது.
இந்நிலையில் ஆல் இன் பிக்சர்ஸ் நிறுவனத்திடம் வாங்கிய ரூ. 2 கோடியை திரும்ப அளிக்க வேண்டும் என கௌதம் வாசுதேவ் மேனனுக்கு சென்னை உச்சநீதி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மேலும் நாளை காலைக்குள் பணத்தை திரும்ப வழங்கவில்லை என்றால் 'துருவ நட்சத்திரம்' படத்தை வெளியிடக்கூடாது எனவும் சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
English Summary
Thuruva Nakshatram release ban Chennai High Court order