TTF வாசன் நடிக்கும் "மஞ்சள் வீரன்".. first look வெளியிட்டது படக்குழு.!! - Seithipunal
Seithipunal


கோவையைச் சேர்ந்த பிரபல யூட்யூபர் டிடிஎஃப் வாசன் 2கே கிட்ஸ் மத்தியில் தனக்கென தனி ரசிகர்கள் பட்டாளத்தை வைத்துள்ளார்.  டிடிஎஃப் வாசனை ட்வின் த்ரோட்லர்ஸ் என்ற பெயரில் உள்ள யூடியூப் சேனலில் அதிவேகமாக பைக்குகளை ஓட்டி அதன் வீடியோக்களை பதிவிட்டு வருகிறார். இவரது வீடியோக்கள் பைக் டிரைவிங் விரும்பும் 2K கிட்ஸ் மத்தியில் மிகவும் பிரபலமானவை.

ஜி.பி முத்து, ரவீனா தாஹா போன்ற பிரபலங்களை பைக்கில் அமர வைத்து அதி வேகமாக வண்டியை ஓட்டி அவர்களை கதிகலங்க செய்துள்ளார். மேலும் டிடிஎஃப் வாசன் நெடுஞ்சாலைகளில் அனுமதிக்கப்பட்ட அளவை விட மிகவும் வேகமாக பைக்குகளை இயக்குகிறார் என பல்வேறு புகார்கள் எழுவதும், அதற்கு அவர் அபராதம் கட்டுவதையும் தாண்டி கைது நடவடிக்கைகளுக்கும் ஆளாகியுள்ளார்.

பல பிரச்சனைகள் தன்னை சூழ்ந்தாலும், அனைத்தையும் சமாளித்து வரும் டிடிஎஃப் வாசன், தற்போது தமிழ் சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமாக உள்ளார். இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் அவரது பிறந்த நாளான இன்று வெளியிடப்பட்டுள்ளது.

தி பட்ஜெட் ஃபிலிம் கம்பெனி தயாரிப்பில் இயக்குனர் செல்ஆம் இயக்கத்தில் டிடிஎஃப் வாசன் நடிக்கும் படத்திற்கு "மஞ்சள் வீரன்" என பெயர் வைக்கப்பட்டுள்ளது. மஞ்சள் வீரன் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கில் டி.டி.எஃப் வாசன் கையில் திரிசூலத்துடன் பைக் ஓட்டுவது போன்ற பர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டுள்ளது. மேலும் 299 கிலோமீட்டர் வேகத்தில் படபிடிப்பு ஆரம்பம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஃபர்ஸ்ட் லுக்கின் பின்னணியில் அய்யனார் சிலை அமைந்துள்ளதால் கிராமத்தை தழுவிய படமாக இருக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

TTF Vasan starrer movie first look release


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->