கோட் படம் டிக்கெட் விற்பனை - நிர்வாகிகளுக்கு பறந்த அதிரடி உத்தரவு.! - Seithipunal
Seithipunal


விஜய் நடிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் கோட். இந்தத் திரைப்படம் வருகிற செப்டம்பர் மாதம் 5ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்தப் படத்தில் விஜயுடன் பிரசாந்த், அஜ்மல் அமீர், சினேகா, லைலா, மீனாட்சி சவுத்ரி, பிரபுதேவா, மோகன் மற்றும் ஜெயராம் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். 

யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ள இந்தப் படத்தை ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ளது. இதையடுத்து படத்தின் வெளியீட்டை முன்னிட்டு டிக்கெட் முன்பதிவு தொடங்கப்பட்ட நிலையில், ரசிகர்கள் டிக்கெட்டுகளை வாங்கி குவித்து வருகின்றனர். 

இந்த நிலையில் 'கோட்' திரைப்பட டிக்கெட் விற்பனை நேற்று ஆன்லைனில் தொடங்கி உள்ள நிலையில் இதுதொடர்பாக விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளுக்கு தலைமை இன்று புதிய உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. 

அதாவது, திரைப்பட டிக்கெட்டை விஜய் மக்கள் இயக்கத்தினர் வாங்கி, அதிக விலைக்கு விற்பனை செய்யக் கூடாது என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

tvk party order no ticket sales highest price


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->