யு/ஏ சான்றிதழை பெற்றது சூரியின் கருடன்.! - Seithipunal
Seithipunal


தமிழ் திரையுலகின் நகைச்சுவை நடிகர் சூரி "விடுதலை" படத்தைத் தொடர்ந்து பல படங்களில் கதாநாயகனாக நடித்து வருகிறார். அந்த வகையில் சூரி நடிப்பில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் படம் தான் கருடன். 

இந்த படத்தில் மலையாள நடிகர் உன்னி முகுந்தன், சசிகுமார், சமுத்திரக்கனி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து பின்னணி வேலைகள் நடைபெற்று வருகிறது.

இந்தப் படத்துக்கான கதையை பிரபல இயக்குநர் வெற்றிமாறன் எழுத, துரை செந்தில்குமார் இயக்கியுள்ளார். ஆக்சன் பாணியில் உருவாகியுள்ள இந்தப் படம் நாளை மறுநாள் வெளியாக உள்ளதால் படத்தின் டிரைலரை படக்குழு சமீபத்தில் வெளியிட்டது.

இந்த நிலையில், இந்தப் படத்திற்கு தணிக்கைக்குழு யு/ஏ சான்றிதழ் வழங்கியுள்ளது. இதனை நடிகர் சூரி தனது எக்ஸ் பக்கத்தில் புகைப்படம் வெளியிட்டு தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

UA certificate to karudan movie


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->