ராமேஸ்வரம் மீனவர்கள் 10 பேர் சிறைபிடிப்பு...இலங்கை கடற்படை மீண்டும் அட்டூழியம்!
10 Rameswaram fishermen apprehended Sri Lankan Navy Again
கச்சத்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்த மண்டபத்தைச் சேர்ந்த 10 மீனவர்களை இலங்கை கடற்படை மீண்டும் சிறை பிடித்து சென்றுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் இருந்து கடலுக்கு மீன் பிடிக்க செல்லும் மீனவர்கள், எல்லை தாண்டி மீன் பிடிப்பதாக கூறி அவ்வவ்ப்போது இலங்கை கடற்படையினர் சிறை பிடிப்பதும், படகுகளை பறிமுதல் செய்வதும் தொடர் கதையாகி வருகிறது. காலம்காலமாக நடந்துவரும் இந்த சம்பவத்தை தடுக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மீனவர்கள் தரப்பில் தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது.மத்திய ,மாநில அரசுகளை மீனவர்கள் வலியுறுத்தி வந்தாலும் இலங்கை கடற்படை மீண்டும் சிறை பிடித்து சென்றுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், எல்லை தாண்டி மீன் பிடித்ததாக ராமேஸ்வரம் மண்டபத்தைச் சேர்ந்த மீனவர்கள் 10 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. மேலும் அவர்களிடம் இருந்து ஒரு விசை படகையும் இலங்கை கடற்படையினர் பறிமுதல் செய்துள்ளனர் என தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் தெற்கு மன்னார் கடற்பரப்பில் கைதான மீனவர்களை இலங்கையில் உள்ள மன்னார் கடற்கரை முகாமிற்கு அழைத்துச் சென்று இலங்கை கடற்படையினர் விசாரணை நடத்தி வருகின்றனர் என முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது . அதனை தொடர்ந்து மீனவர்களை படகுடன் மன்னார் மீன்வளத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்க இருப்பதாக இலங்கை கடற்படை தகவல் தெரிவித்துள்ளது.
இந்தநிலையில் இலங்கை கடற்படையின் தொடர் அட்டூழியத்தால் ராமேஸ்வரம் மீனவர்கள் வேதனை அடைந்துள்ளனர். மேலும் ராமேஸ்வரம் மீனவர்களை மீட்க நடவடிக்கை வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
English Summary
10 Rameswaram fishermen apprehended Sri Lankan Navy Again