ஐ.நா.வில் பிரபல இசையமைப்பாளர்: வைரலாகும் புகைப்படம்! - Seithipunal
Seithipunal


ஜெனிவாவில் உள்ள ஐ.நாவின் தலைமையகத்துக்கு வெளியே பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமான் எடுத்துக்கொண்ட புகைப்படம் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. 

பல்வேறு நாடுகளில் நடைபெறும் இசை நிகழ்ச்சிகளில் இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமான் கலந்து கொண்டு வருகிறார். 

தமிழகத்தில் கோவை, சென்னை என அடுத்தடுத்த இசை நிகழ்ச்சிகள் கடந்த மாதம் நடத்தினார். சென்னை இசை நிகழ்ச்சி போது ஏற்பட்ட கூட்ட நெரிசல் மற்றும் போக்குவரத்து நெரிசலால் பல்வேறு சர்ச்சைகள் கிளம்பின. 

ரசிகர்கள் பலரும் ஏ.ஆர். ரகுமானுக்கு எதிராக கருத்து தெரிவித்த நிலையில், திரை பிரபலங்கள் மற்றும் அரசியல் கட்சியினர் ஏ.ஆர். ரகுமானுக்கு ஆதரவு அளித்தனர். 

இந்நிலையில் ஸ்விட்சர்லாந்து நாட்டில் உள்ள ஐ.நா தலைமையகத்தின் முன்பு ஏ.ஆர். ரகுமான் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார். 

ஆனால் எதற்காக ஐ.நா அவைக்கும் சென்றார் என்ற தகவல் குறிப்பிடப்படவில்லை. கடந்த 2016-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15-ஆம் தேதி சுதந்திர தினத்தை முன்னிட்டு ஏ.ஆர். ரகுமான் ஐ.நாவில் இசை நிகழ்ச்சி ஒன்றை நடத்தினர். 

கர்நாடக பாடகி எம்.எஸ். சுப்புலட்சுமிக்கு பிறகு ஐ.நா சபையில் இசை நிகழ்ச்சி நடத்திய இரண்டாவது இந்தியர் ஏ.ஆர். ரகுமான் என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

UN at Famous Musician Viral Photo


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->