'வெந்து தணிந்தது காடு' படம் எப்படி இருக்கு.?! முதல் ஆளாக உதயநிதி ட்வீட்.!  - Seithipunal
Seithipunal


கௌதம் மேனன் இயக்கத்தில் சிம்பு நடித்துள்ள திரைப்படம் தான் 'வெந்து தணிந்தது காடு'. இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ள நிலையில் பலத்த எதிர்பார்ப்புகளுக்கு இடையில் இன்று இந்த படம் வெளியாகி இருக்கிறது.

ஏற்கனவே, கௌதம் மேனன் மற்றும் சிம்பு இணைந்து நடித்த விண்ணைத்தாண்டி வருவாயா, அச்சம் என்பது மடமையடா உள்ளிட்ட படங்கள் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், வெந்து தணிந்தது காடு படத்தின் மீதும் ரசிகர்களுக்கு பயங்கர எதிர்பார்ப்பு இருந்தது. இந்த படத்தின் டிரைலர் மற்றும் போஸ்டர்கள் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.

இத்தகைய நிலையில் இந்த படம் இன்று தியேட்டர்களில் ரிலீஸ் ஆகியுள்ளது. இதன் பிரிவியூ ஷோவை நேற்று பார்த்த உதயநிதி ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் இந்த படம் குறித்து, "கெளதம் மேனன் மற்றும் சிலம்பரசன் காம்போவில் பெரிய படமாக வந்துள்ளது. 

வெந்து தணிந்தது காடு இந்த வருடத்தின் சிறந்த படங்களின் லிஸ்டில் இடம்பெறும். முத்துவாக சிம்பு கலக்கியுள்ளார். ஒவ்வொரு பிரேமிலும் கெளதம் மேனனின் ஸ்டைலிஷ் வொர்க் தெரிகிறது. ரஹ்மானின் பாடல்களும் அருமை." என்று தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Uthayanithi Stalin about Venthu thandhadhu kadu Movie


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->