''வடக்கன்'' திரைபடத்தின் நியூ டைட்டில்! வெளியான அறிவிப்பு.! - Seithipunal
Seithipunal


பாஸ்கர் சக்தி இயக்கத்தில் டிஸ்கவரி சினிமாஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'வடக்கன்'. புதுமுக நடிகர்கள் நடித்துள்ள இந்த திரைப்படம் வடமாநிலத்தில் இருந்து தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் பணியாற்றும் தொழிலாளர்களை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. 

இந்த திரைப்படம் மே 24ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகியுள்ளதாக படக்குழு அறிவித்திருந்தது. இந்நிலையில் 'வடக்கன்' என்ற தலைப்பை சென்சார் போர்ட் அனுமதிக்க மறுத்ததினால் திரைப்படத்தை திட்டமிட்ட தேதியில் வெளியிட முடியவில்லை. 

மேலும் இந்த திரைப்படத்தின் தலைப்பு மற்றும் வெளியீட்டு தேதி விரைவில் அறிவிக்கப்படும் என பட குழு தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. 

அதன்படி தற்போது இந்த திரைப்படத்திற்கு ''ரயில்'' என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த திரைப்படத்தின் வெளியீட்டு தேதி விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.


 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Vadakan movie New title


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->