புதிய அப்டேட் கொடுத்த "வடக்குப்பட்டி ராமசாமி" படக்குழுவினர்.!
vadakupatti ramasamy movie trailer released tomarrow
இயக்குனர் கார்த்திக் யோகி இயக்கத்தில், சந்தானம் நடிப்பில் உருவாகி உள்ள திரைப்படம் 'வடக்குப்பட்டி ராமசாமி'. இந்த படத்தில் ஜான் விஜய், எம்.எஸ்.பாஸ்கர், ரவி மரியா, மாறன், மொட்ட ராஜேந்திரன், நிழல்கள் ரவி, சேஷு, இட் ஈஸ் பிரசாந்த், ஜாக்குலின் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
பீப்பிள் மீடியா ஃபேக்டரி தயாரிக்கும் இந்தப் படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார். தீபக் ஒளிப்பதிவு செய்ய சிவன் நந்தீஸ்வரன் படத்தொகுப்பு பணியை மேற்கொண்டுள்ளார். இந்தப்படம் வரும் பிப்ரவரி மாதம் 2-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
![](https://img.seithipunal.com/media/vadakupatti ramasami-2rc8k.png)
இதனை படக்குழு சமீபத்தில் போஸ்டரை பகிர்ந்து அறிவித்த நிலையில், இந்தப் படத்தின் புதிய அறிவிப்பு ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி, 'வடக்குப்பட்டி ராமசாமி' திரைப்படத்தின் டிரைலர் நாளை வெளியாகவுள்ளது.
இந்தத் தகவலை படக்குழு காமெடியான வீடியோ ஒன்றை பகிர்ந்து அறிவித்துள்ளது. இந்த வீடியோவை ரசிகர்கள் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகின்றனர்.
English Summary
vadakupatti ramasamy movie trailer released tomarrow