பாரதிராஜாவுக்கு என்னாச்சு..? வைரமுத்து மருத்துவமனையில் பரபரப்பு பேட்டி.!
Vairamuthu Press meet about barathiraja
பாரதிராஜாவின் உடல் நலம் குறித்து கவிஞர் வைரமுத்து சென்னை எம் ஜி எம் மருத்துவமனையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார்.
கோலிவுட் சினிமாவில் பிரபல இயக்குனர் பாரதிராஜா கடந்த வாரம் மதுரை விமான நிலையத்தில் மயக்கமடைந்த காரணத்தால் ஒரு நாள் மதுரையிலேயே ஓய்வெடுத்துவிட்டு பின், சென்னைக்கு திரும்பினார்.
அதன்பின்னர் நீலாங்கரையில் இருக்கும் தனது இல்லத்தில் ஓய்வெடுத்த நிலையில் அவருக்கு மீண்டும் அஜீரண கோளாறு ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, சென்னையில் இருக்கும் மருத்துவமனையில் பாரதிராஜா பரிசோதனைக்கு அனுமதிக்கப்பட்டார்.
இந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த பாரதிராஜாவிற்கு சோதனைகளுக்கு பின் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. தற்போது அவர் மேல் சிகிச்சைக்காக எம்.ஜி.எம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.
அவரை நலம் விசாரிக்கச் சென்ற கவிஞர் வைரமுத்து செய்தியாளர்களிடம் பேசிய போது, " பாரதிராஜாவுக்கு நெஞ்சு சளி இருக்கிறது. நன்றாக பேசுகிறார். ஆளை அடையாளம் கண்டு கொள்கிறார். விரைவில் நலமுடன் வீட்டிற்கு வருவார்." என்று தெரிவித்துள்ளார்.
English Summary
Vairamuthu Press meet about barathiraja