பிரபல சீரியல் நடிகை மனநல மருத்துவமனையில் அனுமதி.?! ரசிகர்கள் அதிர்ச்சி.! - Seithipunal
Seithipunal


விஜய் தொலைக்காட்சியில் பிரபல சீரியல் நடிகையாக இருக்கும் ஸ்ரீநிதி சமூக வலைதளங்களில் மிகவும் சுறுசுறுப்பாக இயங்க கூடியவர். சமீபத்தில் இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு நாள் அனைவரும் திருமணம் செய்து கொண்டு சென்று விடுவார்கள். நானும் நடிகர் சிம்புவும் மட்டும்தான் மிச்சம் இருப்போம் என்று ஒரு மீமை பதிவிட்டு இருந்தார்.

இதற்கு ஒரு ரசிகர், "நீங்கள் இருவரும் ஏன் திருமணம் செய்து கொள்ளக்கூடாது.?" என்று அவரை டேக் செய்து ஒரு பதிவிட்டார். இதற்கு பதிலளித்த ஸ்ரீநிதி, "அப்படி ஒரு விஷயம் நடந்தால் நன்றாகத்தான் இருக்கும். ஆனால் இப்பொழுது எனக்கு ஆள் இருக்கு." என்று சோகமாக கூறிஇருந்தார்.

இந்த பதிவின் மூலம் நடிகை ஸ்ரீநிதி ரசிகர்களிடம் பயங்கர வைரலாகி விட்டார். இந்த நிலையில், தற்போது அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கிறார். 

அவருக்கு மனநல பாதிப்பு இருப்பதாக அவரது தாய் சமீபத்திய பேட்டி ஒன்றில் கூறியிருந்த நிலையில், தற்போது புழல் பகுதியில் அமைந்துள்ள மருத்துவமனையில் அவருக்கு கவுன்சிலிங் மற்றும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இது அவரது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

valimai movie vijay tv srinithi in mental hospital


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->