'வாரிசு' இசை வெளியீட்டு விழா.. படக்குழுவினருக்கு அபராதம் விதிப்பு.. எதற்காக தெரியுமா.? - Seithipunal
Seithipunal


விஜய் நடிப்பில் வம்சி இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் தான் வாரிசு. இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். இதில், சரத்குமார், ஷியாம் உள்ளிட்ட பல்வேறு பிரபலங்கள் நடித்துள்ளனர்.

இந்த படத்தின் வேலைகள் மிக விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் சமீபத்தில் இந்த படம் பொங்கலுக்கு ரிலீசாக உள்ளது.

இந்த நிலையில் தளபதி விஜய் நடிக்கும் வாரிசு திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நேற்று நடைபெற்றது. இதில், விஜய் உள்ளிட்ட படக்குழுவினர் அனைவரும் கலந்து கொண்டனர்.

இந்த நிலையில் வாரிசு திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவின் போது நேரு உள்விளையாட்டு அரங்கில் அதிகப்படியான இருக்கைகள் சேதம் அடைந்துள்ளதாக அரங்கு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும், நாளை சேதம் குறித்து கணக்கெடுப்பு பணிகள் தொடங்க உள்ளதாகவும், கணக்கெடுப்பு பணிகள் முடிந்த பின் தயாரிப்பு நிறுவனத்திடம் அபராதம் வசூலிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Varisu audio launch nehru stadium chairs damage


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->