விஜயின் வாரிசு படத்தின் இசை வெளியீட்டு விழா எப்போது? எங்கு தெரியுமா.? வெளியான அறிவிப்பு.! - Seithipunal
Seithipunal


நடிகர் விஜயின் வாரிசு திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா துபாயில் நடைபெற உள்ளது.

நடிகர் விஜய் தற்போது வம்சி இயக்கத்தில் வாரிசு திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்தத் திரைப்படத்திற்கு தமன் இசையமைக்க தில் ராஜு தயாரிக்கிறார்.

இதில் நடிகை ராஷ்மிகா மந்தனா ஹீரோயினாக நடிக்கிறார். இந்த திரைப்படத்தில் சரத்குமார், நடிகர் ஷ்யாம் உள்ளிட்ட பல பிரபலங்கள் நடிக்கின்றனர். இந்த திரைப்படம் வரும் பொங்கலுக்கு ரிலீஸாக இருக்கிறது. 

இந்த நிலையில் நடிகர் விஜய் பாடியுள்ள 'ரஞ்சிதமே ரஞ்சிதமே' எனத் தொடங்கும் வாரிசு திரைப்படத்தின் முதல் பாடலின் ப்ரோமோ வீடியோ வெளியாகியது. அதனைத் தொடர்ந்து முழுப்பாடல் வரும் நாளை வெளியாகிறது.

இந்த நிலையில் வாரிசு படத்தின் இசை வெளியீட்டு விழா வரும் டிசம்பர் 24ஆம் தேதி துபாயில் மிக பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது. மேலும், இந்த இசை வெளியீட்டு விழாவில் நடிகர் விஜய் உள்ளிட்ட படக்குழுவினர் அனைவரும் கலந்து கொள்கின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Varisu movie audio launch in Dubai December 24


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->