வாரிசு படத்தில், விஜய் செய்யப்போகும் காரியத்தால் படுகுஷியில் ரசிகர்கள்.! - Seithipunal
Seithipunal


பீஸ்ட் திரைப்படத்திற்கு பின் விஜய் தன் வாரிசு என பெயரிடப்பட்டுள்ள படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை பிரபல தெலுங்கு இயக்குனர் வம்சி படிபள்ளி இயக்கிவருகிறார். இது தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் தயாராகி வருகிறது. 

தளபதி விஜயின் பிறந்தநாளை முன்னிட்டு வாரிசு திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. அவர் குடும்ப கதையை தேர்ந்தெடுத்ததற்கு காரணம் தெலுங்கு ரசிகர்களுக்கு பெரும்பாலும் இது போன்ற படங்கள்தான் பிடிக்கும் என்பதுதான். 

அத்துடன், ஏற்கனவே நிறைய ஆக்ஷன் படங்கள் எடுத்து விட்டதால் ஃபேமிலி ரசிகர்களை இழப்பது போன்ற தோற்றம் ஏற்ப்பட்டுள்ளதாம். எனவே, அவற்றை சரி செய்ய வேண்டும் என்பதற்காக விஜய் இந்த முடிவை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் இந்த படத்தில் விஜய் இரட்டை கதாப்பாத்திரத்தில் நடிக்க இருப்பதாகவும், அதில், நடிகர் மற்றும் வில்லன் கதாப்பாத்திரங்களில் விஜய் தான் நடிக்க போவதாகவும் தற்போது தகவல் வெளியாகி இருக்கின்றது. இது அவரது ரசிகர்களை இன்ப அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறதாம். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Varisu Movie villain also vijay


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->