இனி பூவரசியாக இவர் தான்.. ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த சீரியல் நடிகை.! - Seithipunal
Seithipunal


சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சீரியல்களுக்கு ரசிகர்களிடம் எப்பொழுதும் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது. ஒவ்வொரு சீரியலுக்கும் தனி தனி ரசிகர் கூட்டம் இருக்கிறது. 

ஆரம்பத்தில் நேரம் போகவில்லை என்று சீரியல் பார்க்க ஆரம்பிக்கும் பழக்கம், பின்னர் கதை என்னவாயிற்று என்று அடுத்தடுத்து பார்த்து சீரியலுக்கு அடிமையாகிவிடும் நிலை ஏற்படுகிறது. அப்படி ஒரு சீரியல் தான் சன் டிவியில் ஒளிபரப்பப்படும் பூவே உனக்காக சீரியல். இது ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. 

இந்த சீரியலில் ஹீரோயினாக ராதிகா பிரீத்தி நடித்து வந்தார். சமீபத்தில் அவர் சீரியலில் இருந்து விலகுவதாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்து ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தார். இந்த சீரியலுக்கு அதிக ரசிகர்கள் இருப்பதே ஹீரோயின் ராதிகா பிரித்திக்காக தான். 

இவர் சீரியலில் இருந்து விலகியது அவரது ரசிகர்களுக்கு மிகுந்து அதிர்ச்சியை ஏற்ப்படுத்தியது. இந்த சீரியலில் பூவரசி கதாபாத்திரத்தில் தற்போது நடிகை வர்ஷினி நடிக்க உள்ளார். இவர் ஏற்கனவே அக்னி நட்சத்திரம் சீரியல் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. இது குறித்த தகவலை அவரே தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Varshini as poovarasi


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->