வீர தீர சூரன் படம் எப்போது ரிலீசாகும்?
veera theera sooran release update
பிரபல இயக்குனர் அருண்குமார் இயக்கத்தில் விக்ரம் தனது 62 - வது படமான 'வீர தீர சூரன்' படத்தில் நடித்துள்ளார். இந்தப் படத்தில் எஸ்.ஜே.சூர்யா, சுராஜ் வெஞ்சராமுடு, துஷரா விஜயன், சித்திக் ஆகியோர் நடித்துள்ளனர். இந்த படத்தை எச்.ஆர்.பிக்சர்ஸ் சார்பில் ரியா ஷிபு தயாரித்துள்ளார். இந்தப் படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார்.
இரண்டு பாகங்களாக உருவாக உள்ள இந்தப் படத்தின் இரண்டாவது பாகத்தின் படப்பிடிப்பு பணிகள் நிறைவு பெற்றுள்ளது. முதலில் இப்படத்தின் இரண்டாம் பாகம் வெளியாக உள்ளது. அதன் வெளியீட்டிற்குப் பிறகு, முதல் பாகம் உருவாகும் என்று படக்குழு தெரிவித்துள்ளது.
இந்தப் படத்தின் டைட்டில் டீசர் மற்றும் போஸ்டர்கள் சில மாதங்களுக்கு முன்பு வெளியாகி வைரலாகின. இதையடுத்து நேற்று 'வீர தீர சூரன்' படத்தின் டீசர் வெளியானது. இந்த நிலையில், தற்போது இப்படத்தின் ரிலீஸ் தேதி குறித்த புதிய தகவல் வெளியாகி உள்ளது.
அதன்படி, இந்தப் படம் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 24-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என்று புதிய தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆகவே விரைவில் இப்படம் தொடர்பான அடுத்தடுத்த அப்டேட்டுகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
English Summary
veera theera sooran release update