வெற்றிகரமாக முடிந்த அறுவை சிகிச்சை.. நடிகர் பாலாவின் செல்ஃபி புகைப்படம் வைரல்.! - Seithipunal
Seithipunal


நடிகர் பாலாவுக்கு ஏற்கனவே விவாகரத்தான நிலையில், கடந்த 2021 இல் இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். நடிகர் பாலா தமிழில் தம்பி, மஞ்சள் வெயில், காதல் கிசுகிசு, வீரம் மற்றும் அண்ணாத்த உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்திருக்கிறார். 

இவருக்கு கல்லீரல் தொடர்பான நோய் ஏற்பட்டு அதற்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில், கடந்த மார்ச் 6ஆம் தேதி கடுமையான வயிற்று வலி மற்றும் இருமல் ஏற்பட்டு கொச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார்.

இத்தகைய நிலையில் மருத்துவமனையில் தனக்கு ஒரு முக்கிய அறுவை சிகிச்சை நடக்க உள்ளதாகவும் இதில், மரணம் கூட ஏற்பட வாய்ப்பு இருப்பதாகவும், எனக்காக பிரார்த்தனை செய்யுங்கள் என்றும், அவர் ரசிகர்களிடம் கேட்டுக் கொண்டார். 

இந்த நிலையில், தற்போது நடிகர் பாலா மருத்துவமனையில் அறுவை சிகிச்சை மேற்க்கொண்ட பின் நலமாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Veeram actor bala in good Health Condition after surgery


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->