"எனக்காக பிரார்த்தனை செய்யுங்கள்." வீரம் பட நடிகர் சோகத்திலும் உருக்கமான பதிவு.!  - Seithipunal
Seithipunal


நடிகர் பாலா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் தன்னுடைய இரண்டாவது திருமண நாளை கேக் வெட்டி கொண்டாடி இருக்கிறார்.

பாலாவுக்கு ஏற்கனவே விவாகரத்தான நிலையில், கடந்த 2021 இல் இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். நடிகர் பாலா தமிழில் தம்பி, மஞ்சள் வெயில், காதல் கிசுகிசு, வீரம் மற்றும் அண்ணாத்த உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்திருக்கிறார். 

இவருக்கு கல்லீரல் தொடர்பான நோய் ஏற்பட்டு அதற்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில், கடந்த மார்ச் 6ஆம் தேதி கடுமையான வயிற்று வலி மற்றும் இருமல் ஏற்பட்டு கொச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இத்தகைய நிலையில் மருத்துவமனையிலேயே தன்னுடைய இரண்டாவது திருமண நாளை அவர் கேக் வெட்டி கொண்டாடி இருக்கின்றார். ஓரிரு நாட்களில் தனக்கு ஒரு முக்கிய அறுவை சிகிச்சை நடக்க உள்ளதாக அவர் கூறியுள்ளார்.

இதில், மரணம் கூட ஏற்பட வாய்ப்பு இருப்பதாகவும், தப்பிக்க வாய்ப்பு இருப்பதால் எனக்காக பிரார்த்தனை செய்யுங்கள் என்றும், அவர் ரசிகர்களிடம் கேட்டுக் கொண்டுள்ளார். இதை பார்த்த ரசிகர்கள், "நீங்கள் விரைவில் குணமடைந்து விடுவீர்கள். கவலைப்படாதீர்கள்." என்று ஆறுதல் கூறி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Veeram actor bala Sad Post about his Health Condition 


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->