தமிழ் திரையுலகிற்குள் களமிறங்கும் வெங்கட் பிரபுவின் மகள்! - Seithipunal
Seithipunal


மாநாடு திரைப்படத்தின் வெற்றிக்கு பிறகு வெங்கட் பிரபு தற்போது இயக்கி வரும் படம் கஸ்டடி. இந்தத் திரைப்படத்தில் நாகா ஜெய் தன்யா ஹீரோவாக நடிக்கிறார். மேலும் அரவிந்த்சாமி  மற்றும் சரத்குமார் ஆகியோரும் இந்த திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

நாக சைதன்யா முதன்முதலாக காவல்துறை அதிகாரியாக நடிக்கும்  திரைப்படம் என்பதால்  இந்தத் திரைப்படத்திற்கு எதிர்பார்ப்புகள் அதிகமாக உள்ளது. திரைப்படத்திற்கு இசைஞானி இளையராஜாவும் யுவன் சங்கர் ராஜாவும் இணைந்து இசைய வைத்துள்ளனர் இந்தத் திரைப்படம் வருகின்ற மே மாதம் 12ஆம் தேதி திரைக்கு வர இருக்கிறது.

தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் மும்முறமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. மிகப் பிரம்மாண்டமாக உருவாக்கப்பட்டுள்ள இந்த திரைப்படம் ரசிகர்களிடம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் படத்தில் மேலும் ஒரு செய்தி வெளியாகி ரசிகர்களை இன்பதிரிச்சி அடைய வைத்திருக்கிறது.

கஸ்டடி திரைப்படத்தின் மூலம்  இயக்குனர் வெங்கட் பிரபுவின் மகள் ஸ்ரீ சிவானி தமிழ் சினிமாவில் அறிமுகமாக இருக்கிறார். ஆம் கஸ்டடி திரைப்படத்தின் மூலம் இவர் பாடலாசிரியராக தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆகிறார். இவர் எழுதிய முதல் பாடல் வருகின்ற 10ஆம் தேதி  வெளியாக இருக்கிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

venkat prahu daugter will made her debut as a song writer in custody


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->