மூத்த நடிகர் மாமுக்கோயா மருத்துவமனையில் அனுமதி.. அதிர்ச்சியில் திரையுலகம்..!! - Seithipunal
Seithipunal


மலையாள சினிமாவின் முன்னணி நடிகரான மாமுக்கோயா நாடக கலைஞராக தனது வாழ்க்கையை தொடங்கி பின்னர் திரையுலகில் அடி எடுத்து வைத்து காமெடி நடிகராக பிரபலமடைந்தவர். மலையாளத்தில் 450-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள மாமுக்கோயா இரண்டு முறை கேரள மாநில அரசின் விருதுகளை பெற்றுள்ளார்.

தற்பொழுது இவருக்கு 76 வயது ஆகும் நிலையில் மலப்புரத்தில் நடைபெற இருந்த பூங்கொடு ஜானகியை செலவன்ஸ் கால்பந்து தொடரை தொடங்கி வைப்பதற்காக வந்திருந்தார்.

அப்பொழுது பெரும் கூட்டம் ஒன்று செல்பி எடுப்பதற்காக அவரை சூழ்ந்தது. அப்பொழுது அவர் அசௌகரியமாக இருப்பதாக கூறியதோடு கால்பந்து மைதானத்தில் சரிந்து விழுந்தார். இதனைத் தொடர்ந்து அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக ஐசியூவில் அனுமதிக்கப்பட்டார். தற்பொழுது அவருடைய உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். மூத்த மலையாள நடிகர் மாமுக்கோயா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் மலையாளத் திரை உலகில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Veteran Malayalam actor Mamukhoya admitted to hospital


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->