உதவி இயக்குனர்களுக்கு நிலம் வாங்கிக்கொடுத்த இயக்குனர் வெற்றிமாறன்.. பாராட்டும் ரசிகர்கள்.! - Seithipunal
Seithipunal


தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர் வெற்றிமாறன். தற்போது, இவர் சூரியை வைத்து விடுதலை என்ற படத்தை இயக்கியுள்ளார். இந்த திரைப்படம் ஜெயமோகன் எழுதிய சிறுகதையை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டுள்ளது.

இந்த திரைப்படத்தில் சூரி, விஜய் சேதுபதி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். மேலும் விஜய் சேதுபதி, ராஜீவ் மேனன் மற்றும் கௌதம் மேனன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருக்கின்றார். மேலும், இந்த படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைத்துள்ளார். 

இந்த திரைப்படம் இரண்டு பாகங்களாக எடுக்கபட்டு வெளியிடப்படும் என்றும் கூறப்படுகிறது. எனவே, முதல் பாகத்திற்கான வேலைகளை படக்குழு முடித்துள்ளது.

இதனிடையே இந்த திரைப்படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா கடந்த மார்ச் 8-ம் தேதி நடைபெற்றது. இந்த நிலையில் விடுதலை பாகம் 1 திரைப்படம் மார்ச் 31ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் வெற்றிமாறன் தன்னுடைய உதவி இயக்குனர்கள் 25 பேருக்குக்கும் செங்கல்பட்டு மாவட்டம் உத்திரமேரூர் அருகே தலா ஒரு கிரவுண்ட் நிலம் வாங்கி கொடுத்துள்ளார்.

இந்த இடத்தில் வீடு கட்டிக் கொள்ளவோ, அல்லது சிறிய அளவில் விவசாயம் செய்ய அறிவுறுத்தியுள்ளார். ஆனால், எந்த காரணத்தை கொண்டும் அந்த இடத்தை விற்க கூடாது என கண்டிப்பான முறையில் கூறியுள்ளாராம் வெற்றிமாறன். 

தற்போது இது குறித்த தகவல்கள் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதனையடுத்து பல்வேறு தரப்பினரும் இயக்குனர் வெற்றிமாறனை பாராட்டி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Vetrimaran buy land give to assistant directors


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->