வெற்றிமாறனின் விடுதலை படத்தை 18 வயது கீழ் உள்ளவர்கள் பார்க்க கூடாது.. அதிர்ச்சி கொடுத்த சென்சார்.? - Seithipunal
Seithipunal


தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர் வெற்றிமாறன். தற்போது, இவர் சூரியை வைத்து விடுதலை என்ற படத்தை இயக்கியுள்ளார். இந்த திரைப்படம் ஜெயமோகன் எழுதிய சிறுகதையை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டுள்ளது.

இந்த திரைப்படத்தில் சூரி, விஜய் சேதுபதி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். மேலும் விஜய் சேதுபதியை தொடர்ந்து, இதில் மூத்த இயக்குனரான ராஜீவ் மேனன் மற்றும் கௌதம் மேனன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருக்கின்றார். மேலும், இந்த படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைத்துள்ளார். 

இந்த திரைப்படம் இரண்டு பாகங்களாக எடுக்கபட்டு வெளியிடப்படும் என்றும் கூறப்படுகிறது. எனவே, முதல் பாகத்திற்கான வேலைகளை படக்குழு முடித்துள்ளது.

இதனிடையே இந்த திரைப்படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா கடந்த மார்ச் 8-ம் தேதி நடைபெற்றது. இந்த நிலையில் விடுதலை பாகம் 1 திரைப்படம் மார்ச் 31ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் விடுதலை பாகம் 1 திரைப்படத்திற்கு சென்சார் அதிகாரிகள் 'ஏ' சான்றிதழ் அளித்துள்ளனர். அதற்கு காரணம் இந்த திரைப்படத்தில் நிறைய வன்முறை காட்சிகள் மற்றும் ஆபாச வார்த்தைகள் இடம் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. அதன் காரணமாக 18 வயதுக்கு கீழ் உள்ளவர்கள் இந்த திரைப்படத்தை பார்க்க முடியாது. 

மேலும், இந்தத் திரைப்படம் 2 மணி நேரம் 30 நிமிடங்கள் ரன்னிங் டைம் என தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே, வெற்றிமாறன் இயக்கிய வடசென்னை படத்திற்கு 'ஏ' சான்றிதழ் கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Vetrimaran movie viduthalai movie get A certificate


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->