படைப்பு சுதந்திரம் இல்லையா? கொந்தளிக்கும் வெற்றிமாறன்! - Seithipunal
Seithipunal


நயன்தாரா நடிப்பில் வெளியான அன்னபூரணி திரைப்படம் நெட்பிளிக்ஸ் ஓ.டி.டி. தளத்தில்  இருந்து  நீக்கப்பட்டு இருப்பதற்கு, இயக்குநர் வெற்றிமாறன் குண்டடம் தெரிவித்துள்ளார்.

தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டார் என அழைக்கப்படுபவர் நயன்தாரா, நடிகர் ஜெய்யுடன் நீண்ட இடைவெளிக்கு பிறகு நடித்த திரைப்படம் ‛அன்னபூரணி’.

இந்த படத்தை அறிமுக இயக்குனர் நிலஷ் கிருஷ்ணா இயக்கி உள்ளார். கடந்த மாதம் வெளியாகி, நெட்பிளிக்ஸில் தற்போது ஓடிக்கொண்டிருந்த நிலையில், இந்து மத உணர்வுகளை புண்படுத்தும் வகையிலும், லவ் ஜிகாத்தை ஊக்குவிக்கும் வகையிலும் காட்சிகள் இருப்பதாக புகார் எழுந்தது.

படத்தில் வரும் ஒரு காட்சியில்,  சமையல் கலைஞராக நடிகை நயன்தாரா மாற நினைப்பார். அவர் சிறந்த சமையல் கலைஞராக மாறினாரா? இல்லையா? என்பது தான் படத்தின் முடிவாகும்.

 

இந்த படத்தில், வால்மீகியின் இராமாயணத்தில்,  வனவாசத்தின் போது ராமன், லட்சுமணன் இருவரும்  வேட்டையாடிய  சீதாவுடன் சாப்பிட்டனர். அதனால் ராமன் விஷ்ணுவின் அவதாரம் இல்லை என சொல்லி விட முடியுமா?’’ போன்ற வசனங்கள் இடம்பெற்றிருந்தது. 

அதோடு உணவுக்கு மதமில்லை என்று உணர்த்த நினைத்த படக்குழு, அர்ச்சகரின் மகள் நமாஸ் செய்வது போன்ற காட்சியையும் வைத்து இருந்தது. இதற்கு இந்து அமைப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதுதொடர்பாக ரமேஷ் சோலங்கி என்பவர் மும்பை எல்டி பார்க் போலீசில் புகார் செய்திருந்தார். அதில், நயன்தாரா, ஜெய், டைரக்டர் நிலேஷ் கிருஷ்ணா, பஜாதின் சேதி ரவீந்திரா புனித் கோனேகா ஜீ ஸ்டியோஸ் தலைமை அதிகாரி ஷாரிக் படேல், நெட்பிளிக்ஸ் இந்திய தலைமை அதிகாரி ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறப்பட்டு இருந்தது. புகாரின் அடிப்படையில்,எப்ஐஆர் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும், அன்னபூரணி திரைப்படம் நெட்ப்ளிக்ஸ் தளத்திலிருந்து நீக்கக்கப்பட்டுள்ளது. சர்ச்சைக்குரிய காட்சிகள் நீக்கப்பட்டு மீண்டும் படம் வெளியிடப்படும் என்று தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது. 

இந்நிலையில் ,இயக்குநர் வெற்றிமாறன் தந்து சமூகவலைத்தள பக்கத்தில் விடுத்துள்ள செய்திக்குறிப்பில், “தணிக்கைச் செய்யப்படாத படைப்பு சுதந்திரம் என்று எதுவும் இந்தியாவில் இருக்கும் திரைப்பட இயக்குநர்களுக்கு கிடையாது. இது ஓடிடிக்கும் பொருந்தும். 

ஆனால், மத்திய தணிக்கைக் குழு அனுமதி வழங்கிய ஒரு படத்தை, புற அழுந்தங்களால் ஓடிடியில் இருந்து நீக்க வைப்பது திரைத்துறைக்கே நல்லது கிடையாது. ஒரு படத்தை திரையிட அனுமதிப்பதற்கும் மறுப்பதற்கும் தணிக்கைக் குழுவுக்கு மட்டுமே அதிகாரம் உள்ளது. இத்தகைய நிகழ்வுகள் தணிக்கைக் குழுவின் அதிகாரத்தை கேள்விக்குள்ளாக்கும்” என்று தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Vetrimaran say about Annapoorani movie issue


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->