விடுதலை படத்தில் முதலில் நடிக்க இருந்தது.. இந்த நடிகரா.? வெற்றிமாறன் பகிர்ந்த தகவல்.! - Seithipunal
Seithipunal


இயக்குனர் வெற்றிமாறன். தற்போது, சூரியை வைத்து விடுதலை என்ற படத்தை இயக்கி இருக்கின்றார். ஜெயமோகன் எழுதிய சிறுகதையை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட இந்த திரைப்படத்தில் விஜய் சேதுபதி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். 

மேலும், விஜய் சேதுபதியை தொடர்ந்து, இதில் மூத்த இயக்குனரான ராஜீவ் மேனன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருக்கின்றார். இந்த திரைப்படமானது லிமிட்டை தாண்டி எடுக்கப்பட்டு இருப்பதால் இரண்டு பாகங்களாக வெளியிடப்படும் என்றும் கூறப்படுகிறது.

சமீபத்தில், இந்த திரைப்படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா கடந்த மார்ச் 8-ம் தேதி நடந்துள்ள நிலையில், படம் வரும் மார்ச் 31ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இத்தகைய நிலையில் இப்படத்தில் விஜய் சேதுபதி கதாபாத்திரத்தில் முதலில் நடிக்க இருந்தவர் பாரதிராஜா என்ற தகவல் வெளியாகி இருக்கிறது. 

இது பற்றிய தகவலை அப்படத்தின் இயக்குனர் வெற்றிமாறன் பகிர்ந்துள்ளார். அதில், "இந்த வாத்தியார் கதாபாத்திரத்தில் முதலில் பாரதிராஜா தான் நடிக்க இருந்தார். ஆனால் படத்தின் லொகேஷனை பார்த்த பின்பு அது நடக்காது என்பது எனக்கு தெரிந்து போனது. எனவே இதில் 6 நாள் கால் சீட் வாங்கி விஜய் சேதுபதியை நடிக்க வைத்தேன். ஆனால் சூட்டிங் நடந்ததோ 60 நாளுக்கும் மேல்." என்று தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Vetrimaran shares Viduthalai movie and barathiraja  


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->