சூப்பர் ஸ்டார் நடித்த "வேட்டையன்" திரைப்படம்! ஐஸ்வர்யா ரஜினிகாந்த் படம் வெற்றி பெற சிறப்பு வழிபாடு! - Seithipunal
Seithipunal


தமிழ் திரையுலகின் சூப்பர் ஸ்டார் நடிகர் ரஜினிகாந்த், தற்போது அவரது நடிப்பில் தனது 170-வது 'வேட்டையன்' திரைப்படத்தை  நடித்து முடித்துவிட்டார்.

இப்படத்தை லைகா நிறுவனம் தயாரித்துள்ளது. இயக்குனர் த.செ.ஞானவேல் இப்படத்தை இயக்கியுள்ளார். நடிகர் ரஜினிகாந்த் உடன் நடிகர்கள் அமிதாப்பச்சன், பகத் பாசில், துஷாரா விஜயன், மஞ்சு வாரியர், ரித்திகாசிங் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு ராக் ஸ்டார் அனிருத் இசையமைத்துள்ளார்.

இந்நிலையில், இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவுபெற்ற நிலையில் பின்னணி வேலைகள் நடைபெற்று வருகிறது.  உலகம் முழுவதும் தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் மொழிபெயர்த்து இப்படம் வெளியாக உள்ளது.

இப்படத்தின் பர்ஸ்ட் சிங்கிளான 'மனசிலாயோ' பாடலுக்கு ராக் ஸ்டார் அனிருத் மறைந்த பிரபல பின்னணி பாடகரான மலேசியா வாசுதேவன் குரலை ஏ.ஐ தொழில்நுட்பத்தின் மூலம் இப்பாடலுக்கு பயன்படுத்தியுள்ளார் .

நேற்று வெளியான இந்த 'மனசிலாயோ' பாடல் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. மேலும், இந்த படம்  வருகிற அக் 10-ந் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில்வெளியாக உள்ளது. இந்த நிலையில் நடிகர் ரஜினிகாந்தின் மூத்த மகளான ஐஸ்வர்யா ரஜினிகாந்த் 'வேட்டையன்' படம் வெற்றி பெற வேண்டி கோவிலுக்கு சென்றுள்ளார்.

அதாவது, இயக்குனர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் காரைக்கால் மாவட்டம் திருநாள்ளாறில் உள்ள சனீஸ்வர பகவான் கோவில்  நடிகர் ரஜினிகாந்தின் 'வேட்டையன்' திரைப்படம் மிக பெரிய வெற்றி அடைய சிறப்பு வழிபாடு செய்துள்ளார். மேலும் அவரது குடும்பத்தினர் ஒவ்வொருவரின் பெயரிலும் அர்ச்சனை செய்து வழிபாடு செய்துள்ளார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Vettaiyan movie starring superstar Aishwarya Rajinikanth film special worship for success


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->