'தி கேரளா ஸ்டோரி' திரைப்படத்திற்கு  தடை விதித்த மாநிலங்களுக்கு தயாரிப்பாளர் எச்சரிக்கை.! - Seithipunal
Seithipunal


கேரளாவில் இந்து இளம் பெண்களை மூளை சலவை செய்து மதம் மாற்றி ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத இயக்கத்தில் சேர்த்ததாக எடுக்கப்பட்ட படம் தான் தி கேரளா ஸ்டோரி திரைப்படம். கேரளாவில் கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் வெளியான நிலையில் ரசிகர்களிடையே கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது.

இதனையடுத்து தமிழகத்தில் கடந்த மே 5ம் தேதி பலத்த பாதுகாப்புகளுடன் வெளியாகியது. இந்த படத்திற்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியதால் அசம்பாவிதங்களை தவிர்க்க திரையரங்குகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.

இதனிடையே நேற்று முதல் தமிழகத்தில் கேரளா ஸ்டோரி திரைப்படம் திரையிடப்படாது என அறிவிக்கப்பட்டது. அதற்கு காரணம் சட்ட ஒழுங்கு பிரச்சினை மற்றும் படத்திற்கு வரவேற்பு இல்லாததால் திரையரங்கு நிர்வாகங்கள் இந்த முடிவு எடுத்துள்ளதாக தகவல் வெளியாகியது.

இந்த நிலையில் தி கேரளா ஸ்டோரி திரைப்படத்தை திரையிட தடை விதிக்க முடிவு செய்ததாக மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார். மேலும் வெறுப்பு மற்றும் வன்முறை சம்பவங்களை தவிர்க்கவும் மேற்குவங்க மாநிலத்தில் அமைதியை நிலைநாட்டவும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

இந்த நிலையில் கேரளா ஸ்டோரி திரைப்பட காட்சிகள் ரத்து செய்யப்பட்ட தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தயாரிப்பாளர் விபுல் ஷா எச்சரித்துள்ளார். தமிழ்நாடு மேற்கு வங்கம் கேரளா ஆகிய மாநிலங்களில் ரத்து செய்யப்பட்டுள்ளதால் விரக்தி அடைந்த தயாரிப்பாளர் விபுல் ஷா அநீதி இழைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Vibul shah warning to Kerala story movie banned States


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->