''விடாமுயற்சி'' திரைப்படத்தின் அப்டேட் கொடுத்த அஜித்தின் மேலாளர்.! - Seithipunal
Seithipunal


தென்னிந்திய திரை உலகின் முன்னணி நடிகராக இருக்கும் அஜித் துணிவு படத்தை தொடர்ந்து தற்போது ''விடாமுயற்சி'' திரைப்படத்தில் நடித்து வருகிறார். 

மகிழ் திருமேனி இயக்கத்தில் உருவாகும் விடாமுயற்சி திரைப்படத்திற்கு அனிருத் இசை அமைக்கிறார். லைகா நிறுவனம் தயாரிக்கும் இந்த திரைப்படத்தில் அர்ஜுன், திரிஷா, ரெஜினா, சந்திப் கிஷன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். 

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் போன்ற மொழிகளில் உருவாகும் ''விடாமுயற்சி'' திரைப்படம் இறுதிக்கட்ட படப்பிடிப்பை நெருங்கியுள்ளது. இந்த திரைப்படம் காட்சிகள் உருவான வீடியோ சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. 

இந்நிலையில் இந்த திரைப்படம் இந்த ஆண்டு தீபாவளிக்கு திரையரங்குகளில் வெளியாக உள்ளதாக அஜித்தின் மேலாளர் தெரிவித்துள்ளார். 

மேலும் அவர், நாளை மாலை 7.03 மணி அளவில் ''விடாமுயற்சி'' திரைப்படத்தின் முக்கிய அப்டேட்டை லைகா நிறுவனம் வெளியிட உள்ளதாகவும் சமூக வலைதளத்தில் குறிப்பிட்டுள்ளார். இதனால் ரசிகர்கள் விடாமுயற்சி திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வரவிருக்கும் என கருத்து தெரிவித்து வருகின்றனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

vidamuyarchi film new update


கருத்துக் கணிப்பு

இந்தியா இரண்டாவது முறையாக டி-20 உலக கோப்பையை வென்றதற்கு காரணம்?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்தியா இரண்டாவது முறையாக டி-20 உலக கோப்பையை வென்றதற்கு காரணம்?




Seithipunal
--> -->