விடாமுயற்சி அப்டேட்: புது போஸ்டரை வெளியிட்டது படக்குழு - Seithipunal
Seithipunal



நடிகர் அஜித் குமார், இயக்குநர் மகிழ் திருமேனி இயக்கத்தில் நடித்து  வரும் திரைப்படம் விடாமுயற்சி.இந்த படத்தினை  லைகா நிறுவனம் தயாரிக்கும் நிலையில், இந்த படத்தில் அர்ஜூன், ஆரவ், ரெஜினா கசாண்ட்ரா, பிரியா பவானி சங்கர் உள்பட பலர் நடித்துள்ளனர்.தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் 'விடாமுயற்சி' வெளியாகிறது. மேலும் அஜித் குமாரின் 62 ஆவது திரைப்படம் விடாமுயற்சி ஆகும்.

மேலும் அனிருத் இசையமைக்கும் இந்த படத்தின் பெரும்பாலான படப்பிடிப்பு அஜர்பைஜானில் நடந்தது. சமீபத்தில் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டது. அதன்பிறகு தொடர்ச்சியாக விடாமுயற்சி போஸ்டர்கள் வெளியிடப்பட்டு வருகின்றன.அந்த வரிசையில், இன்று மதியம் 1.09 மணிக்கு 'விடாமுயற்சி' படத்தின் அப்டேட் வெளியாகும் என்று படக்குழு அறிவித்து இருந்தது.

அதன்படி தற்போது விடாமுயற்சி படத்தின் புதிய போஸ்டர் வெளியிடப்பட்டு உள்ளது. இந்த போஸ்டரில் நடிகர் நிகில் மேனின் தோற்றம் இடம்பெற்று இருக்கிறது. விடாமுயற்சி படம் நீண்ட காலம் படமாக்கப்பட்டு வருகிறது. இருந்த போதிலும், இதுகுறித்தான  அப்டேட்டுகள் வெளியாகாமல் இருந்தது. தற்போது படக்குழு அடுத்தடுத்து அப்டேட்டுகளை வழங்கி வருவதால் ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

vidamuyarchi update The team has released a new poster


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->