நான்கு நாட்களில் 22 கோடி வசூல் செய்த வெற்றிமாறனின் விடுதலை.! - Seithipunal
Seithipunal


நான்கு நாட்களில் 22 கோடி வசூல் செய்த வெற்றிமாறனின் விடுதலை.!

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவர் வெற்றிமாறன். இவர் இயக்கத்தில் தற்போது வெளியாகியுள்ள படம் விடுதலை. இந்தப் படத்தை ஆர்எஸ் இன்ஃபோடெயின்மென்ட் எல்ட்ரெட் குமார் தயாரித்துள்ளார். 

இந்த படம், எழுத்தாளர் ஜெயமோகன் எழுதிய 'துணைவன்'  என்ற சிறுகதையின் அடிப்படையில் அமைந்துள்ளது. இரண்டு பாகங்களாக எடுக்கப்பட்டுள்ள இப்படத்தின் முதல் பாகம் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. 

இப்படத்தில் நகைச்சுவை நடிகர் சூரி முதல் முறையாக கதாநாயகனாக நடித்துள்ளார். இவருடன் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, பவானி ஸ்ரீ உள்ளிட்ட பல முன்னணி பிரபலங்கள் நடித்துள்ளனர்.

இந்த நிலையில், 'விடுதலை' படத்தின் முதல் பாகம் வெளியாகி நான்கு நாட்கள் ஆன நிலையில், இதுவரைக்கும் 22 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்துள்ளது என்ற தகவல் வெளியாகியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

viduthalai movie twenty two croroes collection in four days


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->