புத்தாண்டில் ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த விக்னேஷ்- நயன் ஜோடி.!
Vignesh nayanthara wishes 2022
கோலிவுட்டில் லேடி சூப்பர் ஸ்டாராக நடிகை நயன்தாரா இருக்கிறார். தமிழில் ஐயா திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமடைந்தவர் நயன்தாரா. சரத்குமாருக்கு ஜோடியாக நடித்த நயன்தாரா அடக்க ஒடுக்கமாக நடித்திருந்ததால் முதல் படத்திலேயே நிறைய ரசிகர்களை பெற்றார்.
இந்த அடக்க, ஒடுக்கம் அவருக்கு எப்பொழுதும் கை கொடுக்கவில்லை. பின்னர், வில்லு, பில்லா போன்ற படங்களில் நயன்தாரா கவர்ச்சி காட்ட வேண்டிய நிலை ஏற்பட்டது. ஆனால், நயன்தாராவின் கவர்ச்சிக்கு அந்த அளவிற்கு வரவேற்பு கிடைக்கவில்லை என்பதே உண்மை.
பின்னர், இது சரிப்பட்டு வராது என்று முடிவெடுத்த நயன்தாரா கதைக்கு முக்கியத்துவம் வாய்ந்த படங்களில் நடிக்கத் துவங்கினார். நயன்தாராவின் இந்த முயற்சி அவருக்கு பெரிய அளவில் கைகொடுத்தது. இதற்கிடையில் காதல், கல்யாண சர்ச்சைகள் அவரை பெரிய மன உளைச்சலுக்கு ஆளாக்கியது.
எப்படியோ அனைத்தையும் கடந்து தற்போது லேடி சூப்பர் ஸ்டார் அந்தஸ்தை நயன்தாரா பெற்றுவிட்டார். சமீபகாலமாக பட தயாரிப்பு, புது லிப் பாம் பிசினஸ் என்று தனது காதலருடன் இணைந்து நயன்தாரா நிறைய விஷயங்களை செய்து வருகிறார். இந்த நிலையில் தற்போது ரவுடி பிக்சர்ஸ் சார்பில் ரசிகர்களுக்கு புத்தாண்டு-வாழ்த்துக்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
Vignesh nayanthara wishes 2022