சூப்பர் ஸ்டார் ரஜினிக்காக எழுதிய முதல் பாடல் - விக்னேஷ் சிவன் ட்விட்!
Vignesh Shivan Twitter
இயக்குநர் விக்னேஷ் சிவன், சூப்பர் ஸ்டார் ரஜினிக்காக முதல் பாடலை எழுதியுள்ளதாக தெரிவித்துள்ளார்.
ரஜினிகாந்த் நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் உருவான 'ஜெயிலர்' படத்தில் தமன்னா, ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு, விநாயகன், மற்றும் சிவராஜ்குமார் வில்லனாகவும் மோகன் லால் ஆகியோர் சிறப்பு கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார். இப்படம் ஆகஸ்ட் 10-ஆம் தேதி வெளியாக உள்ளது.
கடந்த வாரம் சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில், இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா கோலாகலமாக நடைபெற்றது. சுமார் 2 ஆண்டுகளுக்குப் பிறகு ரஜினி நடித்த படம் திரையரங்குகளில் வெளியாக இருப்பதால் அவரது ரசிகர்கள் உற்சாகமாகவும் ஆவலாகவும் உள்ளனர்.
மேலும் 'ஜெயிலர்' படத்திற்கான டிக்கெட் முன்பதிவும் தொடங்கிய நிலையில் தற்போது ரசிகர்கள் விறுவிறுப்பாக உள்ளனர்.
இந்த படத்தில் வரும் 'ரத்தமாரே' என்ற பாடலை இயக்குநரும், நயன்தாராவின் கணவருமான விக்னேஷ் சிவன் எழுதியுள்ளார். இந்நிலையில் இப்பாடலை படக்குழு நேற்று வெளியிட்டுள்ளது.
இது குறித்து விக்னேஷ் சிவன் தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்திருப்பதாவது, ''இந்த முதல் பாடலை தலைவர் சூப்பர் ஸ்டார் ரஜினிக்காக எழுதியுள்ளேன். இதுபோன்ற தருணங்களுக்காகதான் வாழ்கிறோம். இயக்குநர் நெல்சன் மற்றும் அனிருத்திற்கு நன்றி'' என அவர் பதிவிட்டுள்ளார்.